விஜயின் “யோகன் அத்தியாயம்” ஜூலையில் ஆரம்பம்:கவுதம் அறிவிப்பு
இயக்கம், இந்தி படம், சொந்த தயாரிப்பு என காலில் சக்கரம் கட்டாத குறையாக கெளதம்மேனன் செம பிஸியாக இருக்கிறார்.
தனது அடுத்த தயாரிப்பு, இயக்கம் குறித்து கெளதம் மேனன் வெளியிட்டுள்ள ஷெட்யூல்ட் விபரம்…
” ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்னும் படத்தினை தயாரிக்க இருக்கிறேன். பிரேம் சாய்என்ற இயக்குனர் இயக்க இருக்கிறார். ஜெய் மற்றும் ரிச்சா தமிழிலும், நிதின் மற்றும் ரிச்சாதெலுங்கிலும் நடிக்க இருக்கிறார்கள்.
‘COURIER BOY KALYAN’ என்று தெலுங்கில் இப்படத்திற்குதலைப்பிடப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு கார்த்திக் இசையமைக்க இருக்கிறார்.
அவரதுஇசையை கேட்டேன் அருமையாக இருக்கிறது. ஜுன் 14ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்குபடப்பிடிப்பு துவங்குகிறது.
‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் இசை வெளியீடு ஜுலை முதல் வாரத்தில் இருக்கும். ஜுலை1ம் தேதி கூட இருக்கலாம். படத்தின் இசை கண்டிப்பாக அனைவரையும் கவரும். படம் ஆகஸ்ட்அல்லது செப்டம்பரில் வெளிவரும்.
‘மாற்றான்’ அலையில் காணாமல் போக விருப்பமில்லை.தயாரிப்பில் இருக்கும் ‘தங்கமீன்கள்’ ஒரு மென்மையான படம். விரைவில் அப்படம் வெளிவரும்.யுவனின் இசை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரும்.
ராம் ஒரு அற்புதமான இயக்குனர்.
எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘யோஹன்’ படத்தின் படப்பிடிப்பு, ஜுலை மாதம் முதல்துவங்குகிறது.
இப்படத்தை ஆக்ஷன் அதிரடி படமாக இயக்க திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
English summary:
Vijay film started on July director gaudam menan that notice.
Filed Under: தமிழ் சினிமா











