விஜயின் ‘ஏக் தா டைகர் ‘ ரீமேக் பற்றி ஜெயம் ராஜாவின் விளக்கம் …!

 Raja explained from vijay remake film,vijay stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

விஜய் நடிக்கும் படத்தை இயக்கவில்லை என்றார் இயக்குனர் ராஜா. ‘ஜெயம், ‘தில்லாலங்கடி, ‘சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய் நடித்த ‘வேலாயுதம் படத்தை இயக்கினார் ராஜா.

சல்மான்கான் இந்தியில் நடித்து திரைக்கு வந்திருக்கும் ‘ஏக் தா டைகர் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பதாகவும் இதை ராஜா இயக்க உள்ளதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

இது குறித்து ராஜா கூறியதாவது:

சல்மான்கான் நடித்துள்ள இந்தி படத்தின் ரீமேக் உரிமையை எனது தந்தை மோகன் வாங்கி இருக்கிறார்.

அப்படத்தில் விஜய் நடிக்க நான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படத்தின் உரிமையை என் தந்தை வாங்கவில்லை. நான் இயக்கவும் இல்லை.

தற்போது அக்ஷய் குமார் நடிக்கும் இந்தி படம் ஒன்றை நான் இயக்குவது பற்றி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.

இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் தயாரிக்க உள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு ஸ்கிரிப்ட் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதில் எந்த படத்தை முதலில் தொடங்குவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

‘வேலாயுதம்’ படத்தை விஜய் நடிக்க இயக்கினேன். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இருவரும் தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறோம். அவருடன் சேர்ந்து படம் உருவாக்க எண்ணி உள்ளோம்.

அடுத்த வருட இறுதியில் அப்படம் தொடங்கப்படும். இவ்வாறு ராஜா கூறினார்.

English summary:

Raja explained from vijay remake film .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal