வடிவேலுவின் புதிய அவதாரம் ?..சந்தானம் கலக்கம் !!

 Vadivelu re-entry by film,santhanam fear,vadivel stills,santhanam stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

கிழட்டு சிங்கமா இருந்தாலும் கிடாப் பல்லு ஸ்டிராங்குன்னு நிரூபிச்சிருக்கார் வடிவேலு. படமே இல்லாமல் வீட்டிலிருக்கும் அவருக்கு ஆறுதலாக, அவர் எப்பவோநடித்த ‘மறுபடியும் ஒரு காதல்’ என்ற படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இதில்தான் நான் என்னைக்குமே சிங்கம்டா என்று மார் தட்டியிருக்கிறார் அவர்.
சிங்கம் கிளம்பிருச்சே, சிற்றுண்டியாவது மிச்சமிருக்குமா என்று பிற நடிகர்களை பதற வைத்திருக்கிறது அவரது ரீ என்ட்ரி.

பல தமாஷ் நடிகர்களை க்ரஷ் பண்ணியிருக்கும் வடிவேலுவின் இந்த ரீ என்ட்ரி சந்தானம் விஷயத்தில் எப்படி? தானும் ஒரு வடிவேலு ரசிகன் என்பதை போலவே பதில்களை சொல்லி பேலன்ஸ் ஏர் ஓட்டியிருக்கிறார் சந்தானம்.

விட்டால் வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க அழைத்தாலும் அவர் மறுக்க மாட்டார் போலிருக்கிறது.

இதற்கிடையில் சந்தானத்தின் இன்னொரு மாஸ்டர் பீஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது சேட்டை. இப்படத்தில் ஒரு சினிமா நிருபராக நடிக்கிறாராம் அவர்.

நடுப்பக்கத்தில் கிசுகிசு எழுதும் இவரது பெயர் நடுப்பக்க நக்கி!
நாகராஜ் என்கிற பெயரைதான் நக்கியாக சுருக்கிக் கொண்டிருக்கிறார் சந்தானம். படத்தில் யாரையெல்லாம் கழுவி எதிலெல்லாம் ஊற்றப் போகிறாரோ? இவரது கிண்டலில் நிருபர்களே சிக்கி சின்னாபின்னமாவார்கள் போல தெரிகிறது.

English summary:

Vadivelu re-entry by film,santhanam fear.


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal