இன்றைய கோலிவூட் கிசு கிசு….!!
பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9′ படத்தில் நடித்த புதுமுக ஹீரோ மிதுன் முரளிக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் படிப்புதான் முக்கியம் என ஏற்க மறுத்துவிட்டாராம்.
செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்துக்காக சண்டை காட்சிகளுக்காக பயிற்சி எடுக்கும் அனுஷ்கா, ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திலேயே அதற்கு அச்சாரமாக ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறார்.
மலையாள படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் சனா கானுக்கு கடவுள் பக்தி அதிகமாம்.
ஸ்ருதி ஹாசன் டெக்னிஷியனாகவும், அக்ஷரா நடிகையாகவும் வருவார் என்று கமல் நினைத்தாராம். ஆனால் ஸ்ருதி நடிகையாகிவிட்டார், அக்ஷரா டெக்னிஷியன் ஆகிவிட்டார்.
வாகை சூடவா இயக்குனர் சற்குணம் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். செப்டம்பரில் ஷூட்டிங் தொடங்குகிறது.
English summary:
Today Kodambakkam gossips.
Filed Under: சினிமா கிசு கிசு











