துப்பாக்கி எப்போது வெளியாகும் பரபரப்பான தகவல்

thuppakki first look poster latest - cineikons.com
விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. பூனேவில் ‘துப்பாக்கி’ படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ‘துப்பாக்கி’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த விஜய், தற்போது பூனேவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பூனேவில் லோனாவாலா இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து விட்ட நிலையில், பரபரப்பாக இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று பாடல்கள் மட்டுமே காட்சிபடுத்த வேண்டியிருக்கிறதாம்.
ஜுலை மாதத்தில் ‘துப்பாக்கி’ படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு “இந்த ஆண்டை ‘மாற்றான்’ ஆளப் போகிறது.. மற்றவர்கள் தள்ளி இருங்கள்.. SURIYA = CLASS + MASS” என்று டிவிட்டர் இணையத்தில் ஒருவர் தெரிவிக்க, அதற்கு முருகாதஸின் பதில் ” பாப்பா தள்ளி போய் விளையாடு!” என்பது தான்!


Filed Under: தமிழ் சினிமா

Tags: ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal