ஓவர் வயலன்ஸ் -தடையறத் தாக்க – திரை விமர்சனம்!

Thadayara thakka film preview,arun vijay stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

உதயம்,சத்யா வரிசைல ரொம்ப நாளுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கும் ஆக்‌ஷன் படம் தான் இது. அருண்க்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால மென்மையான மனம் கொண்ட பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படத்தை பார்க்க முடியாத அளவு அதிக பட்ச வன்முறைக்காட்சிகளும், அந்த வன்முறைக்காகவே ஏ சர்ட்டிஃபிகேட் வாங்குன படம் என்ற எச்சரிக்கையோடு……
அண்ணன் , தம்பி 2 பேரு வில்லன்க..இவங்க பூர்வீகக்கதையே கொடூரம்,அம்மா நடத்தைல சந்தேகப்பட்டு அப்பாவே அம்மிக்கல்லால கொலை செய்ய மகனே அப்பாவை கொலை செய்யறார்.

அப்படி சின்ன வயசுலயே ரத்தம் பார்த்தவங்க பெரிய ஆள் ஆனா காந்தி கொள்கையா வளர்ப்பாங்க..? தாதா கம் ரவுடிங்க ஆகறாங்க..
இந்தியாவுலயே பெரிய கோடீஸ்வரரோட பெண்ணை கிட்நாப் பண்ணி பணம் பறிக்க செய்யும் முயற்சில அண்ணன் அந்த பெண்ணை ரேப் பண்ணிடறான்..அப்போ தம்பியோட அட்வைஸ் “அண்ணே, போதும் அவளை கொன்னுடலாம்”.. அண்ணனோட பதில்..”ஒரு டைம் பத்தாது, இவளை ஒரு பங்களாவுல வெச்சிருந்து அப்பப்ப யூஸ் பண்ணிக்கறேன்..
இப்போ ஹீரோ.. அறிமுகம்.. அவர் தன் லவ்வரோட ரொமான்டிக்கா இருந்தது பத்தாதுன்னு தன் ஏரியா லேடிக்கு ஒரு கந்து வட்டி தகறாருல உதவறாரு.. வில்லன் குரூப்க்கும் அவருக்கும் ஆகலை.. 1008 விஷால், விஜய் படங்கள்ல பார்த்த மாதிரி தனி ஆளா 67 பேரை அடிக்கறாரு..

ஆரம்பத்துல அண்ணன்கார வில்லன் ஒரு ஃபிகரை ரேப்புனானே அவன் யாரோலோ படு பயங்கரமா தாக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல இருக்கான், தம்பிக்காரன் ஹீரோ மேல டவுட் பட்டு சேஸ் பண்றான். பரபரப்பான ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்ல உலகத்துக்கே 3 வது ரீலில் தெரிஞ்ச சஸ்பென்சான கொலையை செஞ்சது ரேப் செய்யப்பட்ட ஃபிகர் தான் என்பது க்ளைமாக்ஸ்ல இயக்குநர் நமக்கு சொல்றார்.. அவ்ளவ் தான் கதை.

ஆரண்ய காண்டம்க்குப்பிறகு ஆண்களால் அதிகம் ரசிக்கும் ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் படம் கொடுத்தத்தற்கும், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் சூப்பர் ஹிட்டே கொடுக்காத அருண்விஜய்க்கு இது நிச்சயம் ஒரு ஹிட் படம் ஆக்கிய இயக்குநருக்கு வாழ்த்துகள். ( பாண்டவர் பூமி நல்ல படம் தான் ஆனால் வசூல் ரீதியா பெரிய அளவில் ஹிட் இல்லை)

ஹீரோ அருண் விஜய்க்கு ஆகிருதியான உடம்பு என்பதாலும், அவர் முகமே இறுகிய நிலையில் இருப்பதாலும் ரொம்ப ஈசியா கேரக்டர்;ல ஃபிட் ஆகிடறார்.. ரொமான்ஸ், ஆக்‌ஷன், ஃபைட் , சேசிங்க் என படம் பூரா இவருக்கு வேலை அதிகம்.. நிறைவான நடிப்பு.. வெல்டன் அருண்..

ஹீரோயின் மம்தா மோஹன் தாஸ். பொட்டு வைக்காத ஃபிகர்ல ஒருவர். இந்தியாவுல பிறந்த பெண் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா ஆனாலும் நெற்றில ஒரு குங்குமப்பொட்டு வெச்சாத்தான் மங்களகரமா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து என்பதால் அதை விடுங்க.. ,மற்றபடி பாப்பாவுக்கு கொடுக்கப்பட்ட கவர்ச்சி காட்டும் பணியில் இயக்குநர் சொன்னபடி செய்து காஆஆட்டி இருக்கிறார்.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் காட்சி ரீதியாகவோ, வசன ரீதியாகவோ கிளு கிளு நிச்சயம்.. ( இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா./)
ரேப் செய்யப்பட்ட பெண்ணாக வரும் ரகுல் ப்ரீத்தியும் பொட்டு வைக்காத ஃபிகர் தான், ஆனா அவருக்கு அதிகம் காட்சிகள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் அவர் வரும் காட்சிகள் எல்லாம் இருட்டாவே இருப்பதாலும் அவர் பொட்டு வெச்சா என்ன? வைக்காட்டி என்ன என்ற எண்ணமே ஏற்படுது..
படத்தில் காமெடி மருந்துக்குக்கூட இல்லை. சீட்டின் நுனியில் அமர வைக்கும் அதிரடிகள். இருப்பதால் அது தேவையும் இல்லை

இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்

1. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் ஹோட்டல்ல சாப்பிட வர்றாங்க.. ஹீரோ ஆர்டர் பண்ணிட்டு ஹீரோயின் கிட்டே பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு பாத்ரூம் வந்து அங்கே இருந்து ஜம்ப் பண்ணி பின்பக்கம் வந்து முகத்தை மறைச்சு வில்லன் ஆள்ங்களை அடிச்சு துவம்சம் பண்ணி பின் நல்ல பிள்ளை மாதிரி ஹீரோயின் கூட உக்காந்து பேசுவது செம சீன்.. தீனா படத்தில் தல ஆக்‌ஷன் நினைவு படுத்துத்து

2. ஹீரோயினை அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக காட்டவோ, அல்லது வித்தியாசமான பெண்ணாக காட்டவோ இயக்குநர் அவரை வெட்கத்தை கேட்டால் கவர்ச்சியைத்தருவேன் என்று சொல்வது மாதிரி கேரக்டராக பயன்படுத்திட்டார்.. ஹீரோ படம் பூரா கம்முன்னு இருந்தாலும் ஹீரோயின் அப்பப்ப ஹீரோவை கில்மாக்கு தூண்டி விட்டுட்டே இருப்பது புதுசு.. சொகுசு ரவுசு..

3. ஹீரோயினுக்கு ஹீரோ அழகிய கலர் கலரான பட்டர்ஃபிளை டிசைடு பாண்ட்டீஸ் கிஃப்ட் பார்சல் வாங்கித்தருவதும், ஊடலான பொழுதுகளில் ஃபோன் பண்ணி இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃபிளை எனக்கேட்டு கிளுகிளுக்க வைப்பதும் செம. ( காதலிக்கு ரோஸ், வாட்ச், கர்ச்சீஃப் வாங்கித்தர்ற காலம் மலை ஏறிப்போச்சுங்கோவ்)

4. காதலிக்கு முன் ஃபிரண்ட்சை விட்டுத்தராத ஹீரோவின் குணமும், அதைக்கண்டும் காணாமல் இருப்பது போன்ற ஹீரோயினின் அனுசரிப்புத்தனமும், அண்டர்ஸ்டேண்டிங்கும் கவிதை.. அது சம்பந்தமான காட்சிகளில் இயக்குநரின் தொடுகை.. ( அதான்பா டைரக்‌ஷன் டச்)

5. பல காட்சிகளில் விறுவிறுப்பான பதை பதைப்பு .. டெம்போ கூட்டுவதில் இயக்குநர் கை தேர்ந்தவரா இருக்கார்..

6. பூந்த,மல்லி புஷ்ப வல்லி டப்பாங்குத்து பாட்டு செம கலக்கல் டேன்ஸ்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. வில்லன்க தண்ணி அடிக்கற சீன்ல லாங்க் ஷாட் யூஸ் பண்ணக்கூடாதா? க்ளோசப்ல சரக்கை காட்றதும், மிக்சிங்கை விலாவாரியா காட்றதும் உவ்வே..

2. படத்துல எதுக்கு அதிக பட்ச இருட்டும், வலிய திணிக்கப்பட்ட மணிரத்னம் டைப் உள்வாங்கும் வசனங்களும்,.. சராசரி ரசிகனுக்கு புரியாது ( அந்த சராசரி ரசிகன் நான் தான் )

3. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை, அம்மா மார்க்கெட் போயிருக்காங்க.. ஹீரோயின் ஹால், வாசல் கதவை பெப்பெரப்பேன்னு திறந்து போட்டுட்டு பாத்ரூம்ல குளிக்குது./. எந்த ஊர்ல அப்படி குளிக்கறாங்க? ( ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்காக கேட்கறோம் ஏட்டய்யா )ஹீரோ நேரா உள்ளே வந்துடறாரு
( காட்சி கிளுகிளுப்பா இருந்தாலும் தமிழன் லாஜிக் பார்ப்பான் ஹி ஹி )

4. ஹீரோ 2 சீன்ல ஹோட்டல்ல ஒரு இங்க்லீஷ் ஃபார்ம் ஃபில்லப் பண்றாரு.. அவர் சாஃப்ட் வேர் கம்பெனி டீலிங்க் எல்லாம் பண்றாரு. அப்படிப்பட்டவர்க்கு சாதாரண இங்க்லீஷ் வார்த்தையான சாரி (SORRY) என்பதற்குக்கூட ஸ்பெல்லிங்க் தெரியாதா? ஒரு சீன்ல தன் ஃபிரண்ட்ஸ் 5 பேர்ட்ட சாரிக்கு ஸ்பெல்லிங்க் என்ன?னு கேனத்தனமா கேட்கறார். அந்த லூசுங்களும் தெரியாதுன்னு சொல்லுது.. ஹய்யோ அய்யோ ( காமெடி சீன்னு நினச்சுட்டார் போல )

5. இடது கைப்பழக்கம் உள்ள ஹீரோ படத்துல பல காட்சிகளில் அதை மெயிண்டெயின் பண்றார்.. அவர் வாட்ச் கட்டறது கூட வலது கைல தான். ஆனா ஒரு சீன்ல அதாவது படம் போட்ட 57 வது நிமிஷத்துல அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன்ல , அப்புறம் ஒரு ஃபைட் சீன்ல எல்லாரையும் போல இடது கைல தான் கட்டி இருக்கார்

6. வில்லன்க ஆள்ங்க ஒரு பாருக்கு வர்றாங்க, அங்கே ஒருத்தனை அடையாளம் காட்டனும்.. அதோ அந்த தாடி வெச்சவன் தான்னு சொன்னா வேலை முடிஞ்சது.. அவன் ஏன் கை நீட்டி காட்டிக்கொடுக்கனும்? அவன் பார்த்தா எஸ் ஆக மாட்டானா?

7. ஒரு கிரிட்டிகலான சிச்சுவேஷன், ஹீரோ ஆட்டோல ஹீரோயின் கூட மிட் நைட்ல போறார்.. அவனுங்க வில்லன்க இருக்கற இடத்துல ஆட்டோவை ஓட்டி ஒரு சந்துல ஆட்டோவை நிறுத்தி ஓடுறாங்க.. இப்போ 24 பேர் வர்றாங்க .. ஆல்ரெடி ஹீரோ ஃபைட் எல்லாம் போட்டு வீரன்னு நிரூபிச்சாச்சு, இப்போ கூட காதலி. இந்த டைம்ல அவர் எவ்ளவ் முன் ஜாக்கிரதையா , வேகமா ஜாக்கிசான் மாதிரி சுறுசுறுப்பா ஃபைட் போடனும்? அதை விட்டுட்டு வில்லன் அடியாளுங்க கிட்டே வந்து 12 தடவை அடிச்சு பின் எம் ஜி ஆர் மாதிரி உதட்டுல ரத்தம் பார்த்த பின் ஃபைட் போடுவது ஓவர்
8. ஒரு சீன்ல ஹீரோ, ஹீரோயின் கார்னர் பண்ணப்படறாங்க, வில்லன் ஆளுங்க 64 பேர் இருக்காங்க , எல்லாரும் அரிவாளோட , தனி ஆளா ஹீரோ எந்த பாதிப்பும் இல்லாம ஃபைட் போட்டு ஜெயிக்கிறார், ஓக்கே ஹீரோயிஷம் தான். ஆனா வில்லன் ஆளூங்க அவ்ளவ் தத்தியா? ஹீரோயின் தேமேன்னு நிக்குது. 64 பேர்ல 4 பேரு ஹீரோயினை பணயப்பொண்ணா பிடிச்சா ஹீரோவை அடக்கலாமே? ரமணா டயலாக் மாதிரி இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் பாலிஸி.. அதை ஏன் யாரும் ட்ரை பண்ணலை?

9. கொலை செய்ய உபயோகப்படுத்துன கிரிக்கெட் பேட்டை ஓடும் காரில் பார்க்கும் அந்த பெண் சாதாரணமா ஜன்னல் வழியா வெளில வீசினா மேட்டர் ஓவர்.. அவர் ஏன் மெனக்கெட்டு கார் பேனட்டுக்குள்ள வைக்கனும்? ஹீரோவை மாட்டி விடனும்கற எண்ணம் எல்லாம் இல்லை. ஏன் ரிஸ்க் எடுக்கறார்?

10. க்ளைமாக்ஸ்ல எல்லாம் சுபம்கற வேளைல அந்த பொண்ணு ஏன் தற்கொலை பண்ணிக்குது? வில்லனை கொலை செய்யும் துணிவு உள்ள பெண், கோடீஸ்வரி ஏன் அந்த முடிவை எடுக்கனும்? கதைக்கு அந்த முடிவு எந்த அளவில் யூஸ்?

English summary:

Thadayara thakka film preview .


Filed Under: திரை விமர்சனம்

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal