விக்ரமின் “தாண்டவம் ” சிக்கலில் தவிப்பு !!
admin | Jun 12, 2012 | 0 comments
விக்ரம் அனுஷ்கா நடிக்க விஜய் இயக்கும் தாண்டவம் படம் லண்டனில் படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதுவரை தமிழ் சினிமா ஒன்று வெளி நாட்டில் தங்கியிருந்த காலத்தை தாண்டி அதிக நாட்களாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தற்போது லண்டனில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலை மேலும் படப்பிடிப்பிற்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் அரச கட்டிடத்தில் எடுக்கப்படவிருந்த காட்சிகள், சீரற்ற கால நிலை காரணமாக நேற்றையதினம் எடுக்கப்படவில்லை. ஜூன் 15 ஆம் தேதிக்குள் படப்பிடிப்பை முடிப்பதற்காக படக்குழு இரவு பகலாக வேலையில் இறங்கியுள்ளது.
English summary:
Vikram film thandavam get some nature troubled.
Filed Under: தமிழ் சினிமா











