ஈழத் தமிழர்கள் பிரச்சனையை மையமாகக் கொண்ட தமிழ்ப படம் !
ஈழத்தின் வலி எப்போது தீரும் என்பதே தெரியவில்லை. தப்பித்த தமிழர்கள் உலகம் முழுக்க பரவியிருப்பதால்தான் சொந்த பூமியில் கதறிக் கொண்டிருக்கும் உறவுகளின் ஈனஸ்வரமாவது வெளியில் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வலியை அவரவர் சக்திக்கேற்ப திரைப்படங்களாக உருவாக்கிக் கொண்டிருக்க, இழந்தது போகட்டும்.
இனியாவது பிழைப்போம் என்று இன்னொரு பிரச்சனையை கிளப்பியிருக்கிறார் ஆனந்த மயூர் ஸ்ரீநிவாஸ். இவர் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்.
சிங்கள ராணுவத்தாலும்
விடுதலைப்புலிகளாலும் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள் இன்னும் அந்த பூமியில் அகற்றப்படாமல் இருக்கின்றனவாம். அதுவும் சுமார் பத்து லட்சம் என்ற அளவில். இவற்றை முழுமையாக அகற்றினால் ஒழிய எந்த நிமிடம் யாருக்கு மரணம் என்பதே தெரியாது. வேதனை என்னவென்றால் இந்த கண்ணிவெடிகளை முழு மூச்சாக அகற்ற துவங்கினாலே, முழுவதையும் அகற்ற இன்னும் 15 வருடங்கள் பிடிக்குமாம்.
இந்த விஷயத்தையெல்லாம் மையப்படுத்திய ‘மிதிவெடி’ என்ற படத்தில்தான் நம்ம ஊர் வில்லன் டேனியல் பாலாஜி சிங்கள ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ‘ஈழ விஷயத்தில் நான் அதிக ஈடுபாடு கொண்டவன். இப்படி ஒரு கதையை சொல்லி, நீங்க சிங்கள அதிகாரியாக நடிக்கணும் என்று ஆனந்த் கேட்டபோது சட்டென்று மறுத்துவிட்டேன். விடாப்பிடியாக பேசிதான் என்னை நடிக்க வைத்தார்’ என்கிறார் டேனியல் பாலாஜி.
ஈழப் பெண் தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கிறார் நீலிமா ராணி. ஈழத் தமிழை பேசி நடிக்க இவர் ஒருபுறம் சிரமப்பட்டிருக்கிறார் என்றால், சிங்களம் பயில டேனியல் பாலாஜியும் மிகவும் கஷ்டப்பட்டாராம். எப்படியோ, படத்தை சொந்த செலவில் முடித்திருக்கிறார் ஆனந்த ஸ்ரீநிவாஸ்.
உலகம் முழுக்க இம்மாதம் 20 ந் தேதி படம் ரிலீஸ். வழக்கம்போல இந்தியாவை தவிர்த்து. படத்தை இங்கேயும் வெளியிட தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்கிறது இந்த டீம்.
English summary:
Elath thamilargal problems are taking the new tamil film.
Filed Under: தமிழ் சினிமா











