கமலுடன் போட்டி போடும் சூர்யா ..?

Competition between kamal and surya movies,kamal stills,surya stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com


அக்டோபர் 12ஆம் தேதி மாற்றான் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் வேறு ஒரு படமும் வெளியாகாது என்று எண்ணி கொண்டிருக்கும்போது திடீரென்று கமலின் விஸ்வரூபமும் அதே தினம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின்றது.

கமலுக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு பெற்று தந்த படமான விஸ்வரூபத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே போல் ஒட்டி பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடிப்பதால் மாற்றானுக்கும் அதே அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

இவ்விரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு பலத்த திண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால் இரு படங்களின் பட்ஜெட் அதிகம்.

மாற்றான் வெளியாவதில் அனேகமாக பிரச்சனை இருக்காது. ஏனென்றால் அதன் அனைத்து வியாபாரங்களும் முடிந்து விட்டன. திரை அரங்குகளை புக் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான் பாக்கி.

ஆனால் விஸ்வரூபத்தின் நிலை அப்படி இல்லை. கமல் கேட்கும் விலை அதிகமாக இருப்பதால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் படம் வெளியாவது தள்ளிப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

English summary:

Competition between kamal and surya movies .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal