உதவி இயக்குனரின் கதையை ‘அபேஷ்’ செய்த பெரிய இயக்குனர் ..!!
‘ஐ யம் ஷாம்’ படத்தின் அப்பட்டமான காப்பிதான் தெய்வ திருமகள். இப்பவும், ‘அது என்னோட சொந்த சரக்கு’ என்று சூடம் கொளுத்தி அந்த வெளிச்சத்தில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் டைரக்டர் விஜய்.
கண்ணுக்கு தெரிஞ்சே இப்படி நடந்திருக்கும் போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘தாண்டவம்’ மட்டும் ஒரிஜனல் சரக்காகவா இருக்கும்? இப்படி ஒரு சந்தேகக் கண்ணோடு அவரை நோக்கும் லட்சோப லட்சம் கண்கள், ‘தாண்டவம்’ எந்த படத்தின் டி.வி.டியிலிருந்து சுடப்பட்டது என்று அலசிக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் விடையாக மெல்ல ஒரு முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். டைரக்டர் ராதாமோகனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் யூடிவி தனஞ்செயனிடம் ஒரு ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்தாராம்.
வாய்ப்பு கேட்டு போன போது நடந்த சம்பவம் அது. தாண்டவமாக இப்போது உருவாகியிருப்பதும் அதே ஸ்கிரிப்ட்தானாம்.
கொஞ்சம் லேட்டாகதான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்திருக்கிறார் உதவி இயக்குனர், நேரடியாகவே யூடிவி நிர்வாகத்தை அணுகியிருக்கிறாராம். சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ரிலீசுக்குள் உதவி இயக்குனரின் வாய் அடைக்கப்படலாம் என்றும் பரிகாச சிரிப்பு சிரிக்கிறது பட்சி!
English summary:
Directors theft for assistant directors story .
Filed Under: சினிமா கிசு கிசு











