ஹீரோவாக விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan

Sivakarthikeyan


பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜ், இயக்கவிருக்கும் புதிய படத்தில் ‘களவாணி’ படத்தின் கதாநாயகியான ஓவியா நடிக்க இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘பசங்க’. இப்படத்தின் மூலம் இயக்குனாரக அறிமுகமானவர் பாண்டிராஜ். இப்படம் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி தேசிய விருது உட்பட பல விருதுகளை அவருக்கு பெற்றுத் தந்தது. இதையடுத்து தனக்கு வெற்றி தேடித்தந்த படத்தின் தலைப்பிலேயே ‘பசங்க புரொடெக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில்தான் ஓவியா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் வடசென்னையில் உள்ள குப்பத்து சிறுவர்களை மையப்படுத்தி இருக்குமாம் படம். இப்படத்தினை பெரியவர்கள் பார்த்து ரசிக்கும்படியாகவும் எடுக்க இருக்கிறாராம் பாண்டிராஜ்.


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , ,

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal