அஜித்திற்கு ‘பாலாபிஷேகம்’ செய்த சிம்பு ..!!உண்மை நிலவரம் ..!
அஜித் குமாரின் தீவிர ரசிகர் சிம்பு. அஜித்தின் படம் எப்போது வந்தாலும் அப்படம் வெளிவந்த நாளில், முதல் காட்சியை பார்த்து ரசிக்கும் அளவிற்கு பரம ரசிகர் அவர்.
தற்போது அவர் அஜித் குமாரின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். நம்ப முடியலையா? அட உண்மைதாங்க…
விஜய சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வாலு’. இப்படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார்.
படத்தின் கதைப்படி சிம்பு, தனது காதலி ஹன்சிகாவுடன் அஜித்தின் பில்லா 2 படத்தை முதல்நாள், முதல் காட்சி பார்க்க தியேட்டருக்கு வருகிறார்.
இக்காட்சி நேற்றைய தினம் சென்னை கமலா தியேட்டரில் வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது ‘பில்லா 2′ அஜித்தின் கட்அவுட்டிற்கு சிம்பு பாலாபிஷேகம் செய்யும் காட்சியும், ஹன்சிகாவுடன் ‘பில்லா 2′ படத்தை பார்த்து ரசிப்பது போன்ற காட்சியையும் படமாக்கியிருக்கிறார்கள்.
‘தல படம்னா தல படம்தாங்க’ என்று படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பஞ்ச் டயலாக்கும் அடித்திருக்கிறாராம்
English summary:
Simbu taking milk bath from ajith.
Filed Under: தமிழ் சினிமா











