நைட் பார்ட்டிகளில் சித்தார்த்தும், ஹன்சிகாவும்..!

தெலுங்கு படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகரான சித்தார்த்துக்கும் உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு இடையே காதல் மலர்ந்து சில காலமாக ஓடியது. இந்நிலையில் திடீரென விரிசல் விட்ட அவர்களது வாழ்க்கையில் புதிதாக ஹன்சிகா மோத்வானி முளைத்திருக்கிறாராம். தெலுங்கில் ஓ மை பிரெண்ட் படத்தில் சித்தார்த்துடன் ஹன்சிகா மோத்வானி நடித்தபோது இந்த காதல் மலர்ந்ததாக டோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. நைட் பார்ட்டிகளில் சித்தார்த்தும் ஹன்சிகா மோத்வானியும் ஒன்றாகவே வலம் வருகிறார்களாம். இதைப் பார்த்து சில ஹீரோக்கள் புகைச்சலுடன் இருக்கிறார்களாம்.
நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதும் எங்கேயும் காதல் படத்தின் போது பிரபுதேவாவிற்கும் ஹன்சிகவும் காதலிப்பதாக கிசுகிசு வந்ததும் இங்குகுறிப்பிடத்தக்கது.
Filed Under: சினிமா கிசு கிசு










