சாருலதா எனக்கு விருதுகளைப் பெற்றுத்தரும்!ப்ரியாமணி!

sharulatha will get award,priyamani hot stills,priyamani hot videos,www.cineikons.com

www.cineikons.com

ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி நடித்திருக்கும் படம் சாருலதா.

இப்படத்தை கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட நான்கு மொழிகளில் தயாராகியுள்ளது.

இதன் தமிழ் பதிப்பை ஹன்ஸ்ராஜ் சக்சேனா வெளியிடுகிறார். இதற்கான இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது.

விழாவில் பங்கேற்ற ப்ரியாமணி கூறுகையில். சாருலதா படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படத்துக்காக நிறைய உழைத்துள்ளோம்.

இயக்குனர் திறமையானவர். நன்றாக படத்தை கொண்டு வந்துள்ளார். இந்த படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். எனக்கு இந்த படம் விருதுகளை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குனர்கள் பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், திரு பிரசாத், ஷக்தி சிதம்பரம், கண்ணன், நடிகர் நந்தா, நடிகை சரண்யா பொன் வண்ணன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், ப்ரியாமணி பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

sharulatha will get award.


Filed Under: நடிகைகள்

Tags: , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal