ஈழத்து விதவைத் தமிழ் பெண்ணை திருமணம் செய்கிறாரா இயக்குனர் ‘சீமான்’ ..!!

Seeman married from widow women,seman stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘தம்பி’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் சீமான். ‘தம்பி’ படத்தினைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தொடங்க இருந்த ‘பகலவன்’ படம் டிராப் ஆகிவிட்டது.

விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டார். ‘பகலவன்’, ‘கோபம்’ என இரண்டு கதைகளை தயாராக வைத்து இருக்கிறார் சீமான்.

பல முன்னணி நடிகர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் சீமான், தனது கதைக்கு ஜீவா பொருத்தமாக இருப்பார் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் ஜீவா ‘முகமூடி’, ‘என்றென்றும் புன்னகை’, ‘டேவிட்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ என மும்முரம் காட்டி வருவதால் சீமான் படத்திற்கு தேதி எப்போது என்பது ஜீவாவுக்கே வெளிச்சம்.

இந்நிலையில் சீமான் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்பது தான் முக்கிய செய்தி. ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் பல முறை அரசுக்கு எதிராக பேசி சிறை சென்று இருக்கிறார்.

பிரபாகன், மதிவதனி திருமணம் செய்துக் கொண்ட அக்டோபர் 1ம் தேதி சீமானின் திருமணம் நடைபெற இருக்கிறது. இது குறித்து சீமான் ” ஆம்.. அக்டோபர் ஒன்று எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம்.

அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன். பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண் தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?

இந்த வருடம் அக்டோபர் ஒன்றில் திருமணம் என்பது உறுதி.. எல்லோரையும் அழைத்து விரைவில் அறிவிப்பேன் ” என்று தெரிவித்து இருக்கிறார்.

பெண் யாராக இருக்கும் என்று விசாரித்ததில் ” திருமணம் செய்ய இருப்பது ஈழத்தைச் சேர்ந்த போராளி விதவைப் பெண்ணான யாழ்மதி ” என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினரிடமிருந்து தகவல் வருகிறது!

English summary:

Seeman married from widow women .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal