இயக்குனர் சசிகுமாரின் தந்தை மரணம்:இறுதி சடங்கில் கலந்துகொண்ட விமல் ..!!

 Director sasiumar father died ,sasikumar stills,vimal stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் தந்தை கே.எஸ்.மகாலிங்கம் (67) மதுரை அருகேயுள்ள புதுதாமரைப்பட்டியில் புதன்கிழமை காலமானார்.

“சுப்பிரமணியபுரம்’, “நாடோடிகள்’, “போராளி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இயக்குநர் சசிகுமார். அவரது தந்தை கே.எஸ்.மகாலிங்கம் புதுதாமரைப்பட்டியில் உள்ள இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலை அவர் காலமானார்.

மறைந்த கே.எஸ்.மகாலிங்கம் புதுதாமரைப்பட்டியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தவர். அவருக்கு சசிகுமார் உள்பட மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அவருடைய இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றது. இறுதிச் சடங்கில் இயக்குநர்கள் சமுத்திரகனி, பாண்டிராஜ், நடிகர்கள் விமல், பரோட்டா சூரி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

English summary:

Director sasiumar father died .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal