படத்தின் தலைப்பு சகுனி ஆனா கிருஷ்ணர்-கார்த்தி!..

‘சிறுத்தை’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘சகுனி’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ‘உதயன்’ படத்தில் நடித்த ப்ரணீதா நாயகியாக நடித்துள்ளார். சங்கர் தயாள் என்பவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தமிழில் ‘ட்ரீம் வாரியர்’ என்ற நிறுவனமும், தெலுங்கில் ‘சிறுத்தை’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் தயாரித்து வருகின்றனர்.
தெலுங்கு ‘சகுனி’ படத்தின் முதல் பார்வை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது, அப்போது நடிகர் கார்த்தி பேசும்போது ” படத்தின் தலைப்பு சகுனி என்று இருந்தாலும், நான் கிருஷ்ண பகவான் செய்த விஷயங்களைப் பிரதிபலித்து தான் படத்தில் நடித்திருக்கிறேன். இது மாதிரியான ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதை அரசியலைச் சுற்றி அமைந்துள்ளது. பலவித திருப்பங்களைக் கொண்டுள்ளது. ” என்று கூறியுள்ளார்.
இப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் கார்த்தி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்கிறது படக்குழு.
saguni songs free download, free download saguni songs, saguni trailer, saguni songs download, saguni movie reviews, saguni latest news, saguni audio launch date, saguni karthi stills, saguni movie stills free download, saguni movie watch online, saguni video songs free download, free download saguni video songs
Filed Under: சினிமா கிசு கிசு










