நடிகர் ராஜேஷ் மனைவி நேற்று மரணம் …!!
admin | Aug 07, 2012 | 0 comments
கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ராஜேஷ். ஜெய்ஹிந்த், ஆட்டோகிராப் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது மனைவி ஜோன்சிந்தியா நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49.
ஜோன்சிந்தியா உடல் ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று (7-ந்தேதி) மாலை 3 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
English summary:
Actor rajesh wife yesterday morning died .
Filed Under: தமிழ் சினிமா











