நாகரிகம் தெரிந்த பூஜா!மனம் திறந்தப் பேட்டி
பூஜாவை பாராட்டுகிற விஷயத்தில், நானெல்லாம் ரோஜாவை தாலாட்டும் தென்றல்மாதிரிதான். நாகரிகம் பிறந்த இடம் நதிக்கரைதான் என்றால் பூஜா பிறந்த இடமும் அதுவாகதான் இருக்க வேண்டும். அப்படியொரு லாவகமும் நிஜமும் வழிகிறது அவரது பேச்சில்.
அண்மையில் அவர் சொல்லியிருக்கும் பதிலை கேட்டீர்கள் என்றால், ‘அடடா. அது நிஜம்தான்’ என்று சொல்லத் தோன்றும். தமிழ் ஃபீல்டு உங்களை கைவிட்டுடுச்சே என்ற வருத்தம் இருக்கா? இது கேள்வி.
அப்படி சொல்ல முடியாது. நான் சொந்த வீடு கட்டி சந்தோஷமா இருக்கேன் என்றால் அதுக்கு முழு காரணமும் தமிழ் படங்கள்தான். அந்த நன்றியை நான் எப்போதும் நினைச்சுட்டு இருப்பேன்.
சினிமாவில் அதிர்ஷ்டமும் வேணும். அப்பதான் முதலிடத்திற்கு போக முடியும். இதுதான் பூஜாவின் பதில்.
மறுபடியும் பாலா படத்தில் நடிக்க வந்திருக்கிறார் பூஜா. ‘அவ்வளவு பொறுமை எப்படீங்க?’ என்றால், அதற்கும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். ‘பாலாவை பொருத்தவரை ஒரு கண்டிப்பான அப்பா மாதிரி. பரீட்சை நேரத்தில்தான் மிரட்டுவார். மற்ற நேரங்களில் அவரே சாக்லெட், ஐஸ்கிரீமெல்லாம் வாங்கிக் கொடுப்பார்’.
ம்ஹும்… மிளகாய் பொடியில் காபி போட்டுக் கொடுத்தால் கூட ‘ஆஹா பிரமாதம்’ என்பார் போலிருக்கிறது இந்த பொல்லாத அழகி பூஜா.
English summary:
Pooja is very cultural girl in tamil industry.
Pooja congrats in tamil nadu peoples
Filed Under: நடிகைகள்











