கண்கலங்கினார் நயன்தாரா

nayanthara stills,nayanthara hot stills,tamil actress profiels,tamil actors profiels,www.cineikons.com

www.cineikons.com

நடிகர் பிரபுதேவாவுடன் பிரிவுக்கு காரணம் என்ன என நிருபர்கள் கேட்டபோது, நடிகை நயன்தாரா கண் கலங்கினார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடிகை நயன்தாரா நேற்று வந்தார். ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டில் சுவாமியை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சாமியை தரிசனம் செய்தது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. மனதில் இருந்த பாரம் எல்லாம் நீங்கியது போல் உணர்கிறேன் என்றார்.

பிரபுதேவாவுக்கும், உங்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணம் என்ன என நிருபர்கள் கேட்டபோது, கோயிலில் இந்த மாதிரி கேள்வியை கேட்காதீர்கள் என்று கூறி கண் கலங்கினார்.

அவருடன் வந்த உதவியாளர் கூறுகையில், சிவன் கோயிலில் பிரபுதேவாவும், பெருமாள் கோயிலில் நயன்தாராவும் தரிசனம் செய்யுமாறு ஜோசியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதனால் இருவருக்கும் நல்லது நடக்கும் என்று கூறியிருந்தனர். அதன்படி இருவரும் தரிசனம் செய்துள்ளனர் என்றார்.

இந்த தகவலால் பிரபுதேவா நயன்தாரா பிரிந்துவிட்டனர் என்ற பரபரப்புக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரம், பிரபுதேவாவுடன் திருமணத்துக்கு தயாரானபோது படங்களே ஒப்புக்கொள்ளாமல் சினிமாவுக்கு முழுக்கு போட இருந்தார் நயன்தாரா. ஆனால் இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர்கள் பிரிந்துவிட்டது உண்மைதான் என திரையுலகினர் கூறுகின்றனர்.

English summary:
nayanthara prayer for thiruppathi temple


Filed Under: நடிகைகள்

Tags: , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal