‘ராணா – நயன்தாரா’ வின் ஓங்காரம் …!!
தெலுங்கில் ‘VEDAM’ என்ற படத்தின் மூலம் அனைத்து தென்னந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர் க்ரிஷ்.
அதே படத்தினை தமிழில் வானம் என்னும் பெயரில் சிம்பு, அனுஷ்கா, பரத் அனைவரும் நடித்தார்கள். அப்படம் தமிழிலும் வரவேற்பு பெற்றது.
க்ரிஷ் தனது படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ராணா, நயன்தாரா இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். தெலுங்கில் ‘KRISHNAM VANDAE JAGADHGURUM’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்.
தெலுங்கு, தமிழ் என இரு திரையுலகிலும் தனது படத்திற்கு ஏற்கன்வே வரவேற்பு கிடைத்து இருப்பதால், இப்படத்தினை ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயார் செய்கிறார்.
தமிழில் ‘ஓங்காரம்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். தமிழில் ராணா நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு, பொள்ளாச்சியில் நடைபெற்றது.
தற்போது சென்னையில் உள்ள பின்னி மில்ஸில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
English summary:
rana and nayanthara act with ongaram film .
Filed Under: தமிழ் சினிமா











