நயன்தாராவை மறந்து விட்டேன்:பிரபுதேவா பரபரப்பான பேட்டி!!

I forgot nayanthara Prebudeva interview,prabudeva stills,nayanthara stills,nayanthara hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

நயன்தாரா, பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு தயாரான நிலையில் காதலை இருவரும் துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபுதேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா யாகம் வேள்விகள் செய்து இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார்.

பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

தனது காதலுக்கும் அன்புக்கும் மரியாதை இல்லாமல் போனதால் விலகியதாக நயன்தாரா குற்றம் சாட்டினார்.

பழைய வலிகளில் இருந்து மீண்டு வருவதாகவும் இனி முழு கவனமும் சினிமாவில்தான் என்றும் கூறினார். இதற்கு பிரபுதேவா பதில் அளித்துள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- நயன்தாராவுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை. காதலை ஏன் முறித்துக் கொண்டீர்கள்?

பதில்:- இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் எனது பக்குவமும் ஞானமும் பேச விடாமல் தடுக்கிறது. எனவே இந்த விஷயம் பற்றி பேச விரும்ப வில்லை.

அது முடிந்து போன விஷயம். அதை மறந்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்கிறேன். அதுதான் என் பாலிசி.

கே:- நயன்தாரா தனது நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் மதிப்பில்லாமல் போனதால் விலகியதாக வருத்தப்பட்டுள்ளாரே?

ப:- நயன்தாரா வெளிப்படையாக பேசுவது அவரது விருப்பம். அதற்கொல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. அவர் சொல்வதெல்லாம் என்னை பாதிக்காது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.

என்னை பொறுத்தவரை கடவுள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. அவர் என்னை நல்ல பாதையில் வழி நடத்துவார்.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, தங்கர்பச்சான் இயக்கத்தில் நான் நடித்த “களவாடிய பொழுதுகள்” அழகான காதல் கதை. அந்த படத்தின் ரீலிசை ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

இந்தியில் எனது படங்கள் நன்றாக போகிறது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் திரும்பி வருவேன்.

சல்மான்கானுடன் மீண்டும் படம் பண்ண யோசனை இருக்கிறது. ரஜினியின் பாட்சா படத்தை அக்ஷயகுமாரை வைத்து ரீமேக் செய்யப் போவதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல என்றார்.

English summary:

I forgot nayanthara Prebudeva interview .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal