மிஷ்கின் ஜீவா இணையும் ‘முகமூடி’ : – !!
admin | Oct 14, 2011 | 0 comments
‘யுத்தம் செய்’ படத்தினை தொடர்ந்து மிஷ்கின் இயக்க இருக்கும் படம் ‘முகமூடி’. ஜீவா நாயகனாக நடிக்க, பூஜா ஹெக்டே என்ற புதுமுகம் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ போன்ற படங்களின் மூலம் ஏற்பட்ட நட்பால் மீண்டும் நரேனை இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார் மிஷ்கின்.
‘யுத்தம் செய்’ படத்தின் இசையமைப்பாளர் ‘கே’வை, ‘முகமூடி’ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். பாடலாசிரியர் கார்க்கி ஒரு பாடல் எழுத, அதற்கு இசையமைத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு படம் சம்பந்தப்பட்ட வேலைகள் நடைபெற்று வந்தாலும், என்று முதல் படப்பிடிப்பிற்கு செல்ல இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் நவம்பர் 7ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறார்கள். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.
Filed Under: சினிமா கிசு கிசு











