நள்ளிரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட த்ரிஷா!!
பிறந்தநாளையொட்டி தாய்லாந்து தீவில் தோழிகளுடன் டான்ஸ் ஆடினார் த்ரிஷா. த்ரிஷாவுக்கு நேற்று பிறந்த தினம். அதை கொண்டாட ரகசிய பயணமாக தாய்லாந்தில் உள்ள கோ சாமூய் தீவுக்கு தோழி மற்றும் நண்பர்களுடன் சென்றார்.
அங்குள்ள கடற்கரை ஓட்டலில் நள்ளிரவு உற்சாக விருந்தளித்தார். பின்னர் தோழிகளுடன் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். வரும் 7ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார். பிறந்த நாளையொட்டி த்ரிஷாவுக்கு அவரது தாயார் உமா மெர்சிடஸ் பென்ஸ் கார் பரிசளித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:
தாய்லாந்து தீவில் ஜாலியாக பிறந்த நாள் கொண்டாடினேன். ‘கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தம்மு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறீர்களே?‘ என்கிறார்கள். தம்மு மினிமம் கேரண்டியுடன் எடுக்கப்பட்ட மாஸ் படம். அதுபோன்ற படங்களில் நிறைய நடித்திருக்கிறேன்.
அப்படங்கள்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. அந்த பாணியிலான படங்களில் தொடர்ந்து 10 வருடமாக நடித்து வருகிறேன் என்பது எனக்கு கிடைத்த கவுரவம். ‘என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக எப்போதுமே சினிமா இருக்குமா? என்றும் கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாது.
நாளை ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் முன்பு நீங்கள் அப்படி கூறினீர்களே என்ற சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் சினிமாவைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன். நடிப்பையும் எனது சொந்த வாழ்க்கையையும் நான் பிரித்துத்தான் கையாள்கிறேன். இரண்டையும் குழப்பிக்கொள்வதில்லை. வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது என்னுடன் பணியாற்றிய யாரையும் என்னுடன் வீட்டுக்கு அழைத்துப்போகமாட்டேன்.
இதில் எனது நண்பர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. தற்போது விஷாலுடன் சமர், ஜீவா நடிப்பில் அஹமத் இயக்கும் படம், ஜெயம் ரவியுடன் பூலோகம் மற்றும் ரவி தேஜா படம் என இந்த ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறேன்.
English summary:
Treish celebrate our birthday from thailand.Trisha enjoy with our friends in birthday funtion,she is dance with friends.
Trisha mother benze car present by birthday gift in to trisha.
Filed Under: சினிமா கிசு கிசு











