அஜித்,விஜயை மிஞ்சிய சூர்யா ..!!
‘ஏழாம் அறிவு’ படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் ‘மாற்றான்’. ‘கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசை அமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களின் கதையான ‘மாற்றான்’ படத்தினை சுமார் ரூ. 80 கோடிக்கு விலை பேசி வருகிறார்களாம். அதுமட்டுமன்றி ஜெமினி நிறுவனம் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை சுமார் 12 கோடிக்கு வாங்கி இருக்கிறது. வெளிநாட்டு உரிமை 12 கோடி என்பது விஜய், அஜீத் படங்களை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜுலை மாத இறுதியில் ‘மாற்றான்’ படத்தின் இசை வெளியீடு இருக்கும் எனத் தெரிகிறது. படத்தினை ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
ஆனால், இன்னும் முழுமையாக படப்பிடிப்பு முடியவில்லை என்பதாலும், கிராபிக்ஸ் பணிகள் நிறைய இருப்பதாலும் ஆகஸ்ட் 15 அன்று படம் வெளிவருது சந்தேகம்தான் என படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனராம்.
English summary:
surya movie Leading from ajith and vijay movies.
Filed Under: தமிழ் சினிமா











