கரீனா கபூரின் புகை பிடிக்கும் காட்சிக்கு மகளிர் அமைப்பு கண்டனம் …!!
மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படத்தில் தம்மடிக்கும் காட்சியில் நடித்து, அதை பெரிதாக விளம்பரப்படுத்தி வரும் கரீனா கபூருக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஹீரோயின் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் கரீனா. ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் விலகிக் கொண்ட படம் இது.
ரூ. 18 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் கரீனாகபூர் கவர்ச்சியாகவும் புகை பிடித்தும், மது அருந்துவது போலவும் தத்ரூபமாக நடித்துள்ளாராம்.
செப்டம்பரில் வெளியாகும் என்றாலும், கரீனா சிகரெட் பிடித்த படி மது கோப்பையுடன் இருப்பது போல போஸ்டர்கள் மும்பை நகரரெங்கும் ஒட்டப் பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த போஸ்டர்களுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இதையடுத்து டிரெய்லரில் இருந்து புகை பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
English summary:
karina kapoor smoking stills,women’s club resistance .
Filed Under: நடிகைகள்











