எதிர் பாராமல் தூக்கில் தொங்கி மரணம் அடைந்த பிரபல நடிகர்!கண்ணீர் செய்தி
நாடகம், சினிமா போன்றவற்றில் தத்ரூபமாக நடிக்க முயற்சிக்கும்போது சில நேரங்களில் துரதிர்ஷடவசமான சம்பவங்கள் நிகழ்வது உண்டு. அதுபோன்ற ஒரு துயர சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் தொடக்கத்தில் அங்குள்ள ஒரு இடத்தில் “ஏசு சிலுவையில் அறையப்பட்டு அனுபவித்த துன்பங்களை விளக்கும் நாடகம்” நடத்தப்பட்டது. இதில் ஏசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் வேடத்தில் தியுகோ கிலிமிக்(27) என்பவர் நடித்தார்.
இந்த நாடகத்தில் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வது போன்ற ஒரு காட்சி இடம்பெறும். அந்த காட்சியில் அவர் நடிக்கும்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கிவிட்டது. சில நிமிடத்தில் அவர் துடிதுடித்து மயக்கம் அடைந்தார்.
அதன் பின்புதான் அவர் உண்மையிலேயே தூக்கு கயிற்றில் மாட்டி தவிப்பது மற்ற நடிகர்களுக்கு தெரியவந்தது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கோமா நிலையில் இருந்த அவர் மரணம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்துகிறார்கள்.
English summary:
Famous drama actor unfortunately hangup on death.
Filed Under: சினிமா கிசு கிசு











