இன்றைய ஈவினிங் கோடம்பாக்கம் ‘கிசு கிசு’…!!
* தன்னுடன் ஜோடியாக நடித்த அசின், த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, திவ்யா, சமீரா, ஸ்ருதி ஹாசன் ஆகியோரை ‘மாற்றான்’ பட ஆடியோ விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார் சூர்யா.
* ரஜினி நடித்த ‘சிவாஜி’ 3டி தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதற்காக 185 நிமிடம் ஓடும் இப்படம் 137 நிமிடத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.
* ‘கற்றது தமிழ்‘ பட இயக்குனர் ராம் அடுத்து ‘தங்க மீன்கள்’ படம் இயக்கி வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் ராமும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறாராம்.
* கன்னட படங்களில் கவனம் செலுத்திவரும் பிரியாமணி தற்போது சிவ்ராஜ்குமாருடன் நடிக்கும் ‘லட்சுமி’ படத்துக்காக சுவிட்சர்லாந்து செல்கிறார்.
* ‘அங்காடி தெரு’ மகேஷ் நடித்துள்ள ‘லாஸ்ட் பெஞ்ச்’ மலையாள படத்தில் சுகன்யாவும் பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.
English summary:
Evening kodambakkam gossips .
Filed Under: சினிமா கிசு கிசு











