தமிழ் திரையுலகில் 7.1 டிஜிட்டர் சவுண்ட்டில் வெளிவரும் முதல் படம்

jayamravi - cineikons.com
‘எங்கேயும் காதல்’ படத்தினை அடுத்து தனது நடிப்பில் அடுத்த படம் வர இவ்வளவு காலதாமதம் ஆகும் என்று நினைத்து இருக்க மாட்டார் ஜெயம் ரவி.
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘ஆதிபகவன்’. ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு வேடம் திருநங்கை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் நடைபெற்ற ‘ஆதிபகவன்’ படப்பிடிப்பில் நாயகி நீது சந்திராவால் கலந்து கொள்ள முடியவில்லை. வெவ்வேறு படங்களில் நடித்து வந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லையாம்.
இந்நிலையில் தற்போது க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் மற்றும் ஜெயம் ரவி, நீது சந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜெய்ப்பூரில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் அமீர். ஜுலை மாதம் முதல் வாரத்தில் இப்படப்பிடிப்பு துவங்குகிறது.
இதோடு ‘ஆதிபகவன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தெரிவித்து இருக்கிறாராம் அமீர். ஆனால் படக்குழுவினரோ “இப்படிதான் போன படப்பிடிப்பிலும் சொன்னார்” என்று புலம்பி தள்ளுகிறார்களாம்.
தற்போது ‘ஆதிபகவன்’ படப்பிடிப்பிற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்ந்து இருக்கிறது. தமிழ் திரையுலகில் 7.1 டிஜிட்டர் சவுண்ட்டில் வெளிவரும் முதல் படம் ‘ஆதிபகவன்’ தான்.
படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.
ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.எம் ஸ்டூடியோ மிக்ஸ் இதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.


Filed Under: தமிழ் சினிமா

Tags: ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal