தனுஷின் புதிய ‘கொலவெறி ‘…? வீடியோ இணைப்பு ..

Danush new kola veri song like 2 lacks fans,danush stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

டாடா நானோ காருக்காக நடிகர் தனுஷ் பாடிய புதிய கொலவெறி ஸ்டைல் பாடலின் வீடியோ இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் 3 படத்துக்காக பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் குறுகிய காலத்தில் யூடியூபில் பல லட்சம் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. நாடு முழுவதும் தனுஷுக்கு பெரிய அளவில் அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. இதனால், அவருக்கு பாலிவுட்டிலிருந்தும் தற்போது வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், கொலவெறி ஸ்டைலில் புதிய பாடல் ஒன்றை டாடாநானோ காருக்காக பாடி, நடித்துள்ளார் தனுஷ். கொலவெறி பாடல் தமிங்கிலிஷில் வந்த நிலையில், நானோ காருக்காக தனுஷ் பாடியிருக்கும் அசத்தலான பாடல் தமிழ் மற்றும் இந்தி கலந்த கலவையாக எழுதப்பட்டுள்ளது.

கொலவெறி பாடல் போன்றே இந்த பாடலுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், நானோ காரின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் பார்வை மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary:

Danush new kola veri song like 2 lacks fans .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal