விஜய் நம்பிக்கை – கைகொடுக்குமா? காலை வாருமா?

வேலாயுதம் பெரிய அளவுக்கு ஹிட்டாகாவிட்டாலும் ஹிட்டோ ஹிட் என்று விளம்பரம் செய்து ஒரிஜினல் ஹிட் ரேஞ்சுக்கு வேலாயுதத்தை ஆக்கிவிட்டார்கள். படம் நார்மல் என்றாலும் அதுவே விஜய்க்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. காரணம், இதற்கு முன்னால் சமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களும் தொடர்ந்து பிளாப் ஆனதுதான். விஜய் அடுத்து நடிக்கும் மூன்று படங்களையும் ரொம்பவே நம்பியிருக்கிறார். இந்த படங்கள் நிச்சயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு நிறையவே இருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் துப்பாக்கி, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் யோகன் என்னும் ஆக்க்ஷன் படம், தெய்வத்திருமகள் இயக்குநர் விஜய் இயக்கத்தில் துவங்கப்படவிருக்கும் புதியபடம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். இந்த மூன்ற படங்களுமே நிச்சயம் பெரிய அளவுக்கு ஹிட்டாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது விஜய்க்கு. எல்லாமே இயக்குநர்கள் மீது விஜய் வைத்த நம்பிக்கைதான்.


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , ,

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal