சார்மியை ரவுண்டு கட்டிய சாமிகள் ..நெஞ்சில் ஒரு ஜில் ஜில் …!
புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு திடீரென்று கத்தியாகிவிட்டால் எப்படியிருக்கும்? அப்படியொரு அதிர்ச்சிக்கு தயாராகுங்கள் ரசிகர்களே… அழகுப் பூ சார்மி, அடிதடி சார்மியாகிவிட்டார். இவரது தாம் தூம் அதிரடியை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.
தெலுங்கில் வசூலை வாரிக்குவித்த ‘மங்களா’ என்ற படத்தைதான் தமிழில் டப்பிங்செய்திருக்கிறார்கள். இங்கே அதன் பெயர் ‘சிவாங்கி’. பக்தியும் கத்தியும் கலந்த கதை என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. விபூதியையே சட்டையாக அணிந்திருக்கும் சுமார் பதினைந்து அகோரிகள் சார்மியை ரவுண்டு கட்ட, தனது டேஞ்சர் லைட் கண்களை மேலும் விரித்து அவர்களை பந்தாடினார் அவர்.
இப்படத்திற்கான பிரஸ்மீட்டுக்கு சார்மியும் வருவார் என்று நம்பி ஏமாந்த நம்மை ஆறுதல் படுத்த சில காட்சிகளை திரையிட்டார்கள். மனசை நிரப்பி, அடி வயிறையும் குளிர வைத்தது சார்மியின் அழகு. ஐஸ்கிரீம் தின்று கொண்டே அவர் ஆடும் இன்னொரு பாடல் காட்சியில் பாடலாசிரியரின் பேனா ஆபாசத்தை கொட்டியிருந்தது. ‘நேரடியாகவே மீன் பண்ணிக்கோங்க’ என்று மேலும் வயிற்றெரிச்சலை கொட்டினார் மனுஷன்.
இப்பதானேங்க நான் ஈ படம் வந்துருக்கு. அந்த படத்துக்கு முன்னாடியே ஈ யை வில்லனா காட்டியது நாங்கதான் என்றார் இப்படத்தின் டைரக்டர் ஓஷோ துளசிராம். இன்னும் கொஞ்ச நாட்களில் படம் ரிலீஸ். யாரும் மிஸ் பண்ணாதீங்க என்ற அவரது வேண்டுகோளை யார்தான் மிஸ் பண்ணுவார்கள்?
English summary:
Charmy acting from singvi film .
Filed Under: நடிகைகள்











