‘பில்லா-2 ‘பார்ப்பதற்க்கு ‘வாலுவை ‘ நிறுத்திய சிம்பு ..!!
நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் சேர்ந்து பில்லா 2 படத்தின் முதல் காட்சியை பார்ப்பது போன்று ஒரு காட்சி, அவரது வாலு படத்திற்காக சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டது.
அதற்காக நிஜமாகவே அஜித்தின் கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தார் சிம்பு. சிம்பு எப்போதுமே அஜித் படத்தை முதல் ஆளாகப் பார்த்து விடுவது வழக்கம்.
தற்போது சிம்பு வாலு படத்தில் நடித்து வருகிறார். வாலு படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. வாலு படத்தின் சில காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வைத்து படமாக்கப்பட்டது. இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டுள்ளனர் வாலு குழுவினர்.
ஆனால் சிம்புவோ ஜூலை 13 ஆம் தேதிக்கு அப்புறம் தான் சென்னையை விட்டு வருவேன் என்று கூறியுள்ளார். அஜித் நடித்த பில்லா 2 படமும் ஜூலை 13 ஆம் தேதி தான் வருகிறது. எனவே பில்லா 2 முதல் காட்சியை பார்ப்பதற்காகவே, சிம்பு வாலு படத்திற்காக ஹைதராபாத் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார் என்று தெரிகிறது.
English summary:
Str. stopping for valu shutting reason from billa-2 .
Filed Under: தமிழ் சினிமா











