பில்லா-2 “எ ” சான்றிதல் விவகாரம்:மும்பையில் மேல் முறையீடு !!
அஜீத் நடித்த ‘பில்லா-2′ படத்துக்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் அஜீத் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பலாமா என்று யோசனை நடக்கிறது.
‘பில்லா 2′ படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். கதாநாயகியாக பார்வதி ஒமன குட்டன் நடித்துள்ளார். இப்படத்தில் அஜீத் தாதா கேரக்டரில் நடித்துள்ளார்.
சாதாரண இளைஞன் ரவுடிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி பயங்கர தாதாவாக உருவாவதே கதை. இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வன்முறை சீன்களை நீக்க இயக்குனர் மறுத்ததால் தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். இது குறித்து இயக்குனர் சக்ரி டோலட்டி கூறும் போது பில்லா-2 படம் அதிக சீன்கள் எதுவும் வெட்டப் படாமல் தணிக்கை குழுவில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்றார்.
தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் கூறும் போது ‘பில்லா-2′ படத்துக்கான தணிக்கை பணிகள் இன்னும் முடிவு பெறவில்லை. படத்தின் சீன்களை நீக்க நாங்கள் சம்மதிக்கவில்லை. சான்றிதழ் கைக்கு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.
‘பில்லா-2′ படத்தை வருகிற 23-ந்தேதி ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.
English summary:
Billa-2 film A certificate problem shocking ajith and film groups.
Filed Under: சினிமா கிசு கிசு











