அசின் மும்பை வீட்டில் இரவு விருந்து …!
மலையாள நடிகர், நடிகைகள் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள். மம்முட்டி, மோகன் லால், ஜெயராம், பிருதிவிராஜ், நயன்தாரா, அசின், மீராஜாஸ்மீன், பத்மபிரியா, அனன்யா, கோபிகா போன்றோர் வீட்டிலும் படப்பிடிப்பு தளங்களிலும் புத்தாடை உடுத்தி ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
நடிகைகள் வீட்டு வாசலில் பூக்கோலம் போட்டு, விசேஷ விருந்து சமைத்து சாப்பிட்டனர். ஓணம் எனக்கு பிடித்த பண்டிகை என்று அசின் கூறினார். அவர் தற்போது மும்பையில் ‘கிலாடி’ இந்திப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். மும்பையிலேயே ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
ஓணம் பண்டிகை குறித்து அசின் அளித்த பேட்டி வருமாறு:-
ஓணம் பண்டிகையை கேரளாவில் எனது வீட்டில் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கேரளா செல்ல முடியவில்லை. மும்பையில் கொண்டாடுகிறேன். இரவு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்க உள்ளேன்.
எனது தாய் ஓணம் பண்டிகையையொட்டி வீட்டில் விசேஷ ஏற்பாடுகள் செய்தார். பூக்கோலம் போடப்பட்டது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஓணம் பண்டிகைக்கு மலையாளி அல்லாதவர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பேன்.
எனது தாய் அடபாயாசம் உள்ளிட்ட ருசியான உணவுகளை சமைத்து தருவார். ஓணம் பண்டிகைக்கு நான் புத்தாடை எடுப்பேன். பெரும்பாலும் பட்டு பாவாடை சட்டை அணிவேன். உறவினர்கள், நண்பர்களுடன் வீட்டில் ஓணத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.
இவ்வாறு அசின் கூறினார்.
English summary:
Asin give dinner party from mumbai home .
Filed Under: நடிகைகள்











