சுந்தர் .சி யுடன் காதலா ..? ‘அஞ்சலியின் ‘ ஹாட்டான பதில்கள் ..!

Anjali interview ,anjali stills,anjali hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil latest songs free download,tamil old songs free download,www.cineikons.com

www.cineikons.com

கிளாமர், கிசுகிசுவுக்கும் இப்போதைக்கு அஞ்சலிதான் சினிமா பீட் நிருபர்களுக்கு நியூஸ் மிக்சர்!

”இந்திப் படமான ‘டெல்லி பெல்லி’யின் ரீ மேக்கான ‘சேட்டை’ யில் ரொம்ப சேட்டை பண்ண வேண்டி இருக்குமே?”

”டெல்லி பெல்லி கொஞ்சம் வல்கரா, ஓவர் கிளாமரா இருக்கும். அந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுத்தா செம திட்டுதான் கிடைக்கும். அதனால, இயக்குநர் கண்ணன் சார் எல்லாத்தையும் குறைச்சு, தமிழ்நாட்டு டேஸ்ட்டுக்கு மாத்தி இருக்கார். எனக்கு இதில் மாடர்ன் ஜர்னலிஸ்ட் கேரக்டர். டிரெஸ்ஸிங்ல கொஞ்சம் கிளாமரா இருப்பேன். காமெடியில் சந்தானத் துக்குத் தனி டிராக். ஸ்பாட்ல ஆர்யாவும் நானும் நடிச்சதை விடச் சிரிச்சதுதான் அதிகம். படம் செம கலர்ஃபுல்லா இருக்கும்.”

”கேரக்டர் ரோல்ல பாந்தமா நடிக்கிறீங்க… திடீர்னு கிளாமர்ல புகுந்து விளையாடுறீங்க… அறிமுக இயக்குநர் படத்துலயும்
நடிக்கிறீங்க… அஞ்சலி கேம் பிளான் என்ன?”

”அஞ்சலின்னா இப்படித்தான் இருப்பாள்… இப்படித்தான் நடிப்பாள்னு நீங்க யாரும் ஃபிக்ஸ் பண்ணக் கூடாது. ஃபிக்ஸ் பண்ணவும் முடியாது. அதான் என் ஸ்டைல். ஜேம்ஸ்பாண்ட் படம் நடிச்ச பியர்ஸ் பிராஸ் னன், அடுத்த படத்திலேயே ஒரு குடிகாரரா நடிச்சிருக் கார். புது இயக்குநரோ, புது ஹீரோவோ… யாரா இருந் தாலும் எனக்கு அந்தப் படத்தில் நல்ல கேரக்டர் இருந்தா ஓ.கே. பெரிய ஹீரோக்களோட நடிச்சா மட்டும் படம் ஹிட்டாகும்னு இருக்கா என்ன? சினிமாவில் வெற்றிக்குத்தான் மரியாதை. புது இயக்குநர்கள் கதை சொல்லும்போதே என் ஸ்பேஸ் எனக்குப் புரிஞ்சிரும். ‘எங்கேயும் எப்போதும்’ படத் தில் சரவணன் ஒரு அறிமுக இயக்குநர்தான். அந்தக் கதை பிடிச்சதால நம்பி நடிச்சேன். படம் செம ஹிட். புது இயக்குநர்னு யோசிச்சி இருந்தா அப்படி ஒரு கேரக்டர் எனக்குக் கிடைச்சிருக்குமா? எனக்காக நாலு பேர் ஒரு புதுப் படத்தைப் பார்க்கத் தியேட் டருக்கு வந்தாக்கூட எனக்குச் சந்தோஷம் தான்.”

”அடுத்து என்ன படம் பண்றீங்க?”

”சுந்தர்.சி டைரக்ஷன்ல ‘எம்.ஜி.ஆர்.’ விஷாலுக்கு ஜோடியா நடிக்கிறேன். வரலட்சுமி இன்னொரு ஜோடி. அப்புறம் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவர் தம்பி ஹீரோவா அறிமுகம் ஆகும் படத்தில் நான்தான் ஹீரோயின்.”

”நல்ல விஷயம். விஷால், வரலட்சுமி ரெண்டு பேரும் லவ்ல இருக்கிறதா பேசிக்கிறாங்களே… ஸ்பாட்ல அப்படி எதுவும் உங்களுக்குத் தெரியுதா?”

”ஏங்க… நான் நல்லா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா? ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். எனக்கு அவ்வளவுதான் தெரியும். வேற எதுவும்னா அவங்ககிட்டயே கேட்டுக்கோங்க.”

”சுந்தர்.சியோட லவ், அவர் படத்துல ஸ்விம்சூட்ல நடிக்கிறீங்கனு வெப்சைட்ல உங்களைப்பத்தி அப்டேட்ஸ் வந்துட்டே இருக்கே?”

”ஓ… இது புதுசா இருக்கே. நெட்ல என்னைப் பத்தி ஏதாவது ஒரு கிசுகிசுவைக் கிளப்பிவிட்டுட்டே இருக்காங்க. என்னைப் பத்தி எனக்குத் தெரிஞ்சதைவிட, அவங்களுக்குத்தான் அதிகம் தெரிஞ்சிருக்கு.”

”தமிழ்ல எல்லாப் படங்களும் பார்க்கிறீங்களா? தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு?”

”அடுத்த சூப்பர் ஸ்டாரா… (ஜெர்க் ஆகிறார்) ரஜினி சார் இருக்கும் வரைக்கும் அவரை யாரும் அடிச்சுக்க முடியாதே. அப்புறம் யார் வருவாங்கனு இன்னொரு பேட்டியில யோசிச்சுச் சொல்றேனே… ப்ளீஸ்!”

”உங்க ராசி சென்டிமென்ட் என்ன?”

”நிறைய. சிலது ரொம்பக் காமெடியா இருக்கும். சீரியஸா ஒண்ணு சொல்லட்டுமா? நான் நடிச்ச ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் திருப்பதிக்குப் போய் ஒரு ஸ்பெஷல் பூஜை பண்ணுவேன். அப்படிப் பண்ணினா படம் ஹிட் ஆகும்னு என் நம்பிக்கை.”

”திடீர்னு ஸ்க்ரீன்ல குண்டாத் தெரியுறீங்க… அடுத்த படத்துல ஒல்லியா இருக்கீங்க?”

”காலைல யோகா… சாயங்காலம் ஜிம். மனசு சொல்றதை எல்லாம் உடம்பு கேட்கும். இதுதான் ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட்!”

English summary:

Anjali interview .


Filed Under: நடிகைகள்

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal