அனிருத் ‘வாய் ‘ப்பை நல்லா பயன்படுத்துகிறார் ..பார்த்திபன் தாக்கு ..!
இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை ஆன்ட்ரியாவும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்ட படஙகள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
சென்னை நந்தம்பாக்கத்தில் விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பார்த்திபன் இந்த முத்தப் படங்களை விமர்சித்தார். அனிருத் மீதும் மறைமுகமாக தாக்கினார்.
அவர் பேசும் போது:-
‘தாண்டவம்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 25 படங்களுக்கு அவர் இசையமைத்து விட்டார்.
இசையமைப்பாளர்களுக்கு இன்றைய தினம் நிறைய ‘வாய்’ப்புகள் கிடைக்கின்றன. ‘வாய்’க்குள்ளே மைக் வைத்து பாடுகிறார்கள். இன்னும் சிலர் வேறு விஷயங்களுக்கும் வாயை பயன்படுத்துகின்றனர். ‘வாய்’…ப்பை நல்லாவே பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் பேசியதும் விழாவில் பங்கேற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அனிருத்தை மறைமுகமாக சாடுவதாக கூட்டத்தினர் கிசுகிசுத்தனர்.
English summary:
Thandavam music launch function parthiban statement .
Filed Under: சினிமா கிசு கிசு











