மணிவண்ணனின் ‘அல்வா ‘ புகழ் அமைதிப்படை பார்ட் -2 விரைவில் …!
புரட்சி இயக்குனர் என பெயர் பெற்ற மணிவண்ணன், இயக்குனராக மட்டுமல்லாமால், வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ் சினிமாவை கலக்கியவர்.
சமீபகாலமாக உடல் நிலை சரியில்லாத காரணத்தில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இவர் இதுவரை 49 படங்களை இயக்கியுள்ளார். தற்போது உடற்பயிற்சி மூலம் உடல் நலம் தேறியிருக்கும் மணிவண்ணன் தனது 50-வது படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக இவரது ஆஸ்தான நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். படத்தின் தலைப்பை இப்போதைக்கு இருவரும் இணைந்து கலக்கிய அமைதிப்படை பார்ட்-2 என பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.
அமைதிப்படை படத்தில் உள்ளதுபோல், வழக்கமான கேலி, கிண்டலை கலந்து திரைக்கதை அமைக்கப்படடுள்ளதாக மணிவண்ணன் கூறியுள்ளார். தற்போதை அரசியலில் ஈழம் தொடங்கி, ஸ்பெக்ட்ரம் வரையிலான பல சம்பவங்களையும் கலந்து காமெடி படமாக உருவாக்கப் போகிறார்களாம்.
English summary:
Manivannan direct from amaithip padai part-2 .
Filed Under: தமிழ் சினிமா











