அஜித் குமார் ‘தல ‘ யான வரலாறு பகுதி – 2 …!
இந்தப்பதிவின் முதல் அஜித் குமார் ‘தல ‘ யான வரலாறு பகுதி – 1 …!. சொல்லால் சொல்லி அடக்க முடியாத வலி; சொல்லி அடங்காதது “தல”யின் புகழ்…! விடா முயற்சியோடு…..தன்னம்பிக்கை இழக்காத ஹீரோக்களை தமிழ் சினிமாவில் நிறையவே பாத்திருக்கின்றோம் அந்த வகையில் நிஜமான ஹீரோ “தல”தான். “தல”யுடைய ஒன்றரை வருஷ மருத்துவமனை சிகிச்சைகள் முடிந்த பிற்பாடு….
அந்த காலத்தில் தேடப்பட்டுகொண்டு இருந்த ஒரு வாய்ப்பு ஒரு செகன்ட் ஹிரோ வாய்ப்பு; அந்த படத்துடைய பேர் “பாச மலர்கள்” படத்துடைய ஹிரோ அரவிந்தசாமி. பாச மலர்கள் படம் நடிக்கும் போதே கிடைத்த இன்னொரு வாய்ப்பு இப்பவும் “தல”க்கு பேர் சொல்லும் படங்களில் ஒன்னான பவித்ரா(1994).
விபத்துக்கள் பல கண்டாலும் வெற்றி என்பது “தல” பக்கம் வலம்வந்தது..! படத்துடைய இயக்குநர் கே.சுபாஷ், ஹீரோயின் கீர்த்தனா, மேலும் நாசர், வடிவேலு, எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா போன்ற முக்கியமான நடிகர்களும் நடித்திருந்தாங்க, பவித்ரா படத்தோட லீடிங் ரோல் என்னவோ ராதிகாவுக்குதான்.! இந்த படத்துக்கு இன்னொரு பிளஸ் இருக்கு.! இசை ஏ.ஆர்.ரகுமான் என்பதுதான்.
இந்த படத்தில் வந்த பாடலான செவ்வானம்….. சின்ன…… என்று தொடங்கும் பாடல் மிகவும் சிறந்த பாடல்களில் ஒன்று, அந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் கொடிகட்டிப்பறந்த ஒரு பாடல் அதுவாகும். இந்த பாடலுக்கான பல்லவியை பாடினயது “பாடும் நிலா பாலு”, பாட்டு மொத்தத்தையும் பாடியது மனோ ஆகும். இந்த படத்தில் வந்த உயிரும் நீயே… எனும் பாடலை பாடிய உன்னி கிருஷ்னனுக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்த படத்தின் பாடல்களை எழுதிய வைரமுத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. இந்த தேசிய விருதுகளுடன் “தல”யின் பக்கம் ஈர்க்கப்பட்ட நபர்தான் கவிப்பேரரசு வைரமுத்து; இவர் “தல’ பெயரை உரக்க சொல்லும் அளவுக்கான பல பாடல்களை எழுதிக்கொடுத்தார்(அட்டகாசம் படத்தில் “உனக்கென்ன உனக்கென்ன…” பாடல் மூலம் “தல”க்கும் “தல” ரசிகர்களுக்கும் ஒரு கெத்தை ஏற்படுத்தினார்).
தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதும் இந்த படத்துக்கு கிடைத்தது. “தல” தன்னுடைய பல பேட்டிகளிலும், தன்னுடைய வாழ்க்கையில் திருப்பு முனைய ஏற்படுத்தியது இந்த பவித்ரா படம்தான் என்று சொல்லியிருக்கின்றார்(ஒரு வெற்றியில் கிடைக்கும் சந்தோசமும் அது கிடைப்பதற்க்கு எல்லோரும் பட்ட பாடும் “தல”க்கு தெரியும் எனவேதான் “தல” வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ள ஒரு போதும் மறப்பது இல்லை.
1994ல் ”பவித்ரா” படத்துக்கு பின்னர், ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒரு முன்னணி நடிகருடன்???, அந்த முன்னணி நடிகர் யாருன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்!!! நீங்க நினைப்பது சரி.. ஆமாம் அவரேதான் இளைய தளபதி விஜய். இருவரும் சேர்ந்து நடித்த முதலும் கடைசியுமான படம் “ராஜாவின் பார்வையிலே” தான்(அடுத்ததாக நேருக்குநேர் என்ற ஒரு படம் நடிப்பதற்க்கு ஒப்பந்தமாகி பின்னர் “தல”க்கு விருப்பம் இல்லாத பல நிகழ்வுகள் இடம் பெற்றதால் “தல” படத்தில் இருந்து விலகிக்கொண்டார்..!).
இந்த படம் 1995ம் ஆண்டு வெளிவந்தது. பவித்திரா படம் எல்லோருக்கும் பிடித்தது போல இன்னுமொரு முக்கியமான ஒருத்தருக்கும் பிடித்தது. அவர் யார் என்று தெரியுமா? அவர்தான் இயக்குனர் வசந்த்(பிற்காலத்தில் ஆசை என்று ஒரு படம் எடுத்து இளம் வயது பெண்களின் மனதில் “தல”யை ஒரு ஆசை நாயகனாக மாற்றியது இதே இயக்குநர் வசந்த் தான்…).
ஆசை பட வாய்ப்பு முதலில் போனது சூர்யாவுக்குதான், ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த வாய்ப்பை சூர்யா நிராகரிக்க, என்ன செய்வது என்று யோசித்த வசந்துக்கு பவித்ரா படம் பார்க்கக்கூடிய சந்தர்பம் கிடைத்தது. அந்த படத்தில் “தல”யுடைய நடிப்பு பிடித்துப்போக “தல’தான் ஆசை படத்துடைய ஹீரோ என்று முடிவு பண்ணிட்டார் இயக்குநர் வசந்த். “பவித்ரா” படம் வரைக்கும் “தல” ஒரு நல்ல நடிகர் என்று அறியப்பட்டாலும், கமர்சியல் வெற்றி “தல”யுடைய கையில் கிடைத்தது ஆசை படத்துக்குதான்.
தலக்கு மட்டும் இல்லை, இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. கல்லூரி கூட்டம் பெருமளவு “தல”க்கு ரசிகர்கள் ஆனதும் இந்த படத்தில்தான். ஆசை படத்துடைய ஹீரோயின் கல்கத்தா ரசகுல்லா சுவலட்சுமி.!!
தன்னோட மொத்த அழகையும் கூடவே ஓரளவுக்கு கவர்ச்சியையும் காட்டி சுவலட்சுமி நடித்திருந்தார். வில்லனாக நடித்து பட்டைய கிளப்பி ஏகப்பட்ட தாய்மார்களிடம் திட்டு வாங்கிய பிரகாஷ்ராஜுக்கும் இன்னும் பல நடிகர்களுக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையை தந்தது. ஆசை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது போலவே, தமிழக அரசின் விருதுகளையும் பெற்று தந்தது.
வசந்துக்கு சிறந்த இயக்குனர் விருது, தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது, கொஞ்ச நாள் பொறு தலைவா…. பாடலை பாடிய ஹரிஹரனுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது போன்றவை முக்கியமான விருதுகள்(அந்த காலத்தில் விருதுகளை வாங்கிக்குமித்த திரைப்படம் என்று சொல்லலாம்). ஆசை படத்துடைய தயாரிப்பாளர் இயக்குனர் மணிரத்னம், தன்னோட சிஷ்யன் வசந்த் மேல் இருந்த நம்பிக்கையில் மணிரத்னம் தயாரித்த படம்தான் ஆசை.
வசந்தும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தன் குருநாதர் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றினார். ஆசை படத்துடைய பாடல்கள் எல்லாமே மிகசிறந்த பாடல்கள். பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ் என்றுதான் சொல்லவேண்டும். இன்றும் சலிப்புத்தட்டாமல் கேட்க்க கூடிய பாடல்கள் அவை.
ஆசை படத்துடைய ஒளிப்பதிவு ஜீவா இவரின் மிக சிறந்த ஒளிப்பதிவு படத்தில் “தல”யின் கேரக்டர் நல்லதொரு அம்சத்தை கொடுத்தது. இந்த படம் 1995ம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டது கூடவே தங்கச்சி இருக்கும் வீட்டில் அக்காவை திருமணம் செய்த ஆண்களின் மனதில் புளியை கரைத்து ஊற்றியது. ஒரு சிலருக்கு இந்த படம் சந்தர்ப்பங்களையும் அமைத்துக்கொடுத்தது…!!!
ஆசை படத்துக்கு பின் இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் “தல” நடிச்சப்படம் வான்மதி. வான்மதி படத்துடைய வெற்றிக்கு பாடுப்பட்டவங்களில் ஒருவர் நடிகை சுவாதி. சுவாதியுடைய தரிசனம் படத்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் பப்ளிசிட்டியையும் தேடி தந்ததுன்னு சொன்னா அது மிகை இல்லை(என்னமா தரிசனம் கொடுத்திருப்பா..கோவில் கட்டாமல் விட்டதுதான் குறை..!!).
இந்த படத்துக்கு இசை தேவா, ஒளிப்பதிவு தங்கர்பச்சான். அகத்தியனின் ஆஸ்தான நடிகர்களான பாண்டு, தாமு போன்றவர்களும் நடித்த படம்தான் வான்மதி. படத்துடைய பாடல்களும் கலக்கின ஆனால் ஆசை படத்தின் பாடல்களின் அளவுக்கு இருக்கவில்லை. இந்த படம் வெளிவந்த ஆண்டு 1996 ஆகும். வெற்றி படத்தை கொடுத்த பின்னும் “தல”க்கு தலைக்கனம் இல்லை என்பதற்க்குக உதாரணம் தான் முன்னணி நடிகர் பிரசாந்துடன் இணைந்து நடித்த கல்லூரி வாசல் என்னும் படம.
கல்லூரி வாசல் படத்தில் வந்த பல இளம் மனதுகளை கவர்ந்த பாடலகள் லயோலா காலேஜ் லைலா…., கிஸ் மீ மிஸ்… ஆகும். படத்துக்கு இசை தொடர்ச்சியாக இந்தக்காலத்தில் யுவன்சங்கர் ராஜாவை போல அந்த காலத்தில் “தல”யின் படங்களையே குறிவைத்து இசை அமைத்து கொடுத்தவர்தான் தேவா. அந்த காலகட்டத்தில் வந்த நல்ல படம் தான் கல்லுரி வாசல், ஆனால் மக்களுக்கு புரிந்ததா இல்லை புரியவில்லையா? தயாரிப்பாளர் கையை கடித்ததா? இல்லை கடிக்கவில்லையா? என்பது இப்பபோது வரைக்கும் வெறுமனையே கேள்விக்குறிதான்.
ஆனாலும் “தல”க்கு இதுவும் ஒரு நல்ல பெயரை வாங்கிகொடுத்த காதல் & நல்ல நட்பு கலந்த சிறந்த படம்தான். இந்த படமும் 1996ல் வெளியாகி ஓடியதா இல்லையா என்ற சர்ச்சைக்கு மத்தியில் கலக்கிய படம் தான் கல்லூரி வாசல்..!
1995ல் மாபெரும் ஹிட் கொடுத்த படமான ஆசைக்கு பின்னர் 1996ஆம் ஆண்டுமொத்தம் 4 படம் நடித்தார். அதில் வான்மதி, கல்லுரி வாசல் படத்துக்கு பின்னர் மூன்றாவதாக வந்த படம் மைனர் மாப்பிள்ளை. இதுவும் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுதான். இன்னொரு ஹீரோவா ரஞ்சித் நடித்திருந்தார்.
ஹீரோயினாக சுபாஸ்ரீ, கீர்த்தனா நடிச்சுருந்தாங்க(ஒரு ஹீரோயின் நடித்தாலே படம் பட்டைய கிளப்பும் இதில் இரண்டு பேர் நடித்திருந்தார்கள் சொல்லவா வேண்டும்..கண்ணா லட்டு தின்ன ஆசையா?? கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா??).
நீங்க இதெல்லாம் ஒரு படமான்னு யாரும் கேக்க கூடாது. அப்போது இருந்த காலகட்டத்திற்க்கு மைனர் மாப்பிள்ளை காமெடியை மையமா வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இதுவரைக்கும் சுமாராக போன “தல”யுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம்; சினிமாவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுத்த படம் 1996ல் கடைசியாக நடித்த படம்.
1996 ன் கடைசி காலக்கட்டத்தில் வெளிவந்த “தல”யுடைய தமிழின் 10வது (1996-ல் 4வது ) படமான காதல் கோட்டை.
காதல் கோட்டை படத்தை பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை… “தல” ரசிகர்களுக்கு மாத்திரம் இல்லாமல் தமிழ் சினிமாவுக்கே ட்ரென்ட் செட்டர் படம் என்பதால் எல்லாருக்குமே தெரியும். என்னை பொறுத்த வரைக்கும் அஜித்தை தவிர வேற யார் இந்த படத்தில் நடித்திருந்தாலும் படத்துடைய கதையே வேற மாதிரி ஆயிருக்கும்(ஆக்கியிருப்பாங்க).
அந்த சூர்யா கேரக்டருக்கான இயல்பு வேற யாருக்கும் வராது; அது “தல”க்கு இயல்பாகவே வரும். ஒரு விதத்தில் பாத்தால் “தல”யுடைய நிஜமான கேரக்டருக்கும் அந்த படத்தில் வரும் சூர்யா எனும் கேரக்டருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கின்றது. இந்த படம் அகத்தியன் இயக்கத்தில், தேவயாணி மற்றும் பலர் நடிப்பிலும் வெளிவந்த வந்த படம்தான் காதல் கோட்டை.
தேவயானிக்கும் ஒரு மறு வாழ்வை கொடுத்தது இந்த படம்தான். படத்துடைய பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் சும்மா கலக்கு கலக்கு என்று கலக்கியிருப்பார் “தல”. நலம் நலமறிய ஆவல், சிவப்பு லோலாக்கு, வெள்ளரிக்கா, கவலை படாதே…. எல்லாம் அருமையான பாடல்கள். அருமையான திரைக்கதை, இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது.
தேவயானிக்கும் சிறந்த நடிக்கைக்கான ஸ்பெசல் விருது கிடைத்தது(கூடவே “தல”க்கும் தேவயாணிக்கும் காதலாம் என்று சொல்லும் அளவிற்க்கு படத்தில் சுவாரஸ்யத்துக்கும் கிசுகிசுக்களுக்கும் குறைவில்லாமல் இருந்தது). காதல் கோட்டை படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
2010ல் காதல் கோட்டை படத்தின் கதை ஒரு நாவாலாகவும் வெளிவந்தது என்றால் அந்த படத்துக்கான வரவேற்பு இத்தனை வருஷத்துக்கு பின்னரும் எப்படி இருக்கு என்று பார்த்துகொள்ளுங்கோ…!(“தல”ன்னா சும்மாவா என்று நீங்க நினைப்பது சரிதான்..!!)
இந்த வரவேற்புக்கு நம்ம “தல”யும் ஒரு காரணம் என்பதை மறுக்கவோ மறந்திடவோ முடியாது? நிறைய நல்ல பேரை வாங்கி கொடுத்த அதே காதல் கோட்டை படம் தான் அஜித்துக்கும் ஹீராவுக்கும் காதலுன்னு கொஞ்சம் என்ன நிறைய கிசு கிசுவையும் கிளப்பி விட்டது(அதை கிசு கிசு என்று சொல்வதை விட காதல் கோட்டையை ஆண்ட காதல் மன்னனின் லீலைகளில் ஒரு பாகம் என்று சொல்லலாம்).
அந்த கிசு கிசுவில் முக்கால்வாசி என்ன முழுவதுமே உண்மையாகத்தான் இருக்கணும்(இப்ப இருக்கின்ற “தல”யைத்தான் நீங்க பார்திருக்கின்றீர்கள் ஆனால் உங்க வயதில இருந்த “தல”யை பார்த்ததில்லையே..சும்மா ஜெமினிகணேசன் தோத்துபோய்விடுவார்..அந்த அளவுக்கு காதல் லீலை செய்யும் ஆளு நம்ம ஆளு..). ஒரு ஹீரோ, நேர்மை, அழகு, உண்மை இன்னும் பல பல அம்சங்களை தகுதியா வைத்திருந்தால் எந்த பொண்ணுக்குதான் பிடிக்காது.
அது போல ஹீராவும் அழகுதான்(அழகுக்கே அழகு என்று சொன்னாலும் அது அளவில்லாதது ஏன்னா ஹீரா அவ்வளோ அழகு…) சைக்காலஜி படித்த பொண்ணு, ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கும் போது இது போல காதல் வருவது சகஜம் தானே(“தல”க்கு அமர்க்களமான வாழ்க்கையை அமைத்து கொடுத்ததே அமர்க்களம் படம் தானே…!). மேலும் கல்யாணம் பண்ணிக்க காதல் கோட்டை தேவயாணி மாதிரி பொண்ணு கேட்க்கும், காதலிக்க ஹீரா மாதிரி பொண்ணு வேணும் என்று கேட்கும் ஆட்கள் தானே நாம்(நாம் என்று சொல்லலாமா???).
அது போல எல்லா ஆண்களுக்கும் தங்கள் முதல் காதல் வெற்றியடையும் என்று சொல்ல முடியாது இல்லையா? அதற்கு பல சொந்த காரணமும் இருக்கலாம். இப்படி கிசு கிசு, காதல் என்பவற்றுக்கு பஞ்சம் இல்லாமல் வந்து கலக்கிய படம்தான் காதல் கோட்டை. ஆக மொத்தத்துல 1996ம் ஆண்டும், அந்த ஆண்டில் வந்த காதல் கோட்டை படமும் மிக சிறந்த நிலையை “தல”யை கொண்டு போய் சேர்த்தது என்று சொல்லணும்.
1996ன் கடைசியில் காதல் கோட்டை எனும் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த தல க்கு 1997ம் வருஷம் கொஞ்சம் மோசமான வருஷம்தான்(கொஞ்ச நஞ்சமா மோசம்..மொத்தமே நாசம்..!). இந்த 1997ம் வருஷம் “தல”யுடைய நடிப்பில் மொத்தம் 5 படங்கள் வெளிவந்தது. அந்த 5 படங்களுமே தோல்வி படங்கள் தான்(தோல்வியை ஒத்துகொள்வதில் என்ன பிழை இருக்கின்றது??).
ஆனால் அதில் 3 படங்கள் ஓரளவுக்கு பேசப்பட்ட படங்கள் மற்றும் அதில் ஒரு படம் ரொம்ப எதிர்பாக்கப்பட்ட படம். 1997ல் ”தல” நடித்து முதலில் வெளிவந்த படம் நேசம். நேசம் படத்துடைய இயக்கமும் தயாரிப்பும் கே.சுபாஷ். இயக்குனர் மணிவண்ணன் நேசம் படத்துக்கான வசனத்தை எழுதினார்.
கவுண்டமணி,செந்தில் இந்த படத்தில் காமடியில் கலக்கி இருந்தார்கள். மணிவண்ணனும் நடித்திருந்தார். படம் தோல்வி படமாயிருந்தாலும் படத்திலுள்ள நகைச்சுவை காட்சிகளும் பாடல்களும் ரொம்ப நல்ல பேசப்பட்டது. இந்த படத்துடைய ஹீரோயின் மகேஸ்வரி. மகேஸ்வரியை சம்பந்தபடுத்தி “தல”யுடைய அடுத்த கிசுகிசுக்கான அத்தியாயம் தொடங்கப்பட்டது.(அதக்காலத்தில் என்ன அந்தக்காலத்தில் இந்த காலத்திலும் பத்திரிக்கையாளர்கள் “தல”யையும் “தல” சம்பந்தமான கிசுகிசுக்களையும் வைத்தே பிழைப்பு நடத்தியது என்பது வெட்ட வெளிச்சம்..) இது ஏன் என்று முக்கியமாக பார்க்க வேண்டும்??
1997ல் ”தல” நடித்த இரண்டு படத்தில் ஹீரோயின் மகேஸ்வரிதான் அதனால் அப்படி ஒரு கிசுகிசு வந்தது என்று சொல்லலாம். மகேஸ்வரியும் ஹீராவும் பார்ப்பதற்க்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பார்கள். நேசம் படத்துடைய பாடல்கள் இன்னிக்கும் நம்மவர் மத்தியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. படத்துக்கான இசையை “தேனிசை தென்றல் தேவா” வழங்கினார்.
இந்த படத்தில் வந்த சூப்பர் ஹிட் கானா பாடல்கள்…. குன்றத்துல கோயிலை கட்டி, நட்சத்திர பங்களா, ஓ ரங்கநாதா…. எனும் பாடலும் கூட நன்றாகத்தான் இருக்கும். அதுவும் ஓ ரங்கநாதா…. பாடல் அந்த காலத்தில் சர்ச்சையை கிளப்பிய பாடல் என்று சொல்லலாம்.
அந்த படத்தில் ஹீரோயின் ஆடிய நடனமும் நெளிவு சுளிவும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத உச்சக்கட்ட நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்துக்கு தமிழக அரசின் 5 லட்சம் ரூபா உதவி தொகையும் கிடைத்தது.
நேசம் படத்துக்கு பின்னர் வந்த படம் ராசி. ராசி படமும் நல்ல படம்தான். இயக்குனர் முரளி அப்பாஸ், ஹீரோயினா ரம்பா. இந்த படத்தில் ரம்பா நல்ல அழகு(அப்ப முன்பு ரம்பா அழகு இல்லையா என்று கேட்காதீங்க..). பிரகாஷ் ராஜ்,வடிவேலுவும் படத்தில் உண்டு. நாகேஷ் & வடிவேலு காமெடி மிகுந்த வரவேற்பை பெற்றது. “தல”க்கு அம்மாவாக ஜெயசித்ரா நடித்திருந்தாங்க.
இது ஒரு குடும்ப சென்டிமென்ட் படம். நல்லா ஓடியிருக்க வேண்டிய படம்தான் ஆனால் ஓடவில்லை. இந்த படத்துக்கு இசை சிற்பி. பாடல்களும் அருமையான பாடல்கள்தான் அதுவும் பூமாலை, காதலின் தேசம்… போன்றவை சிறந்த பாடல்கள் அவற்றை இப்ப கூட கேட்கும் பல ரசிகர்களையும் ரசிக்க வைத்த பாடல்கள் அவை..! படத்தை பற்றி சொல்ல ஒரு பெரிய கதை ஒன்று இருக்கு அடுத்த பதிவில் சொல்கிறோம் ..!
வரலாறு தொடரும் …
English summary:
Ajith cinema history .
Filed Under: தமிழ் சினிமா



















