அஜித் முடிவால் குழம்பும் இயக்குனர் ஏன் ?புதிய பரபரப்புத் தகவல்
ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நடுவில் குறைந்தது ஒரு மாதம் ரெஸ்ட்,குடும்பத்தோடு டூர் என்கிற அஜீத்தின் பாலிஸி அண்மை காலங்களில் விடை கொடுக்கப்பட்டுவிட்டது.
பில்லா-2 படப்பிடிப்பையும் டப்பிங்கையும் கூட முடித்துவிட்ட அஜீத், விஷ்ணுவர்த்தன் இயக்கப்போகும் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார்.
‘நான் ரெடிங்க… எப்போ ஷுட்டிங் போகலாம்?’ என்று அவரே வாய் திறந்து கேட்ட பிறகும் முறையாக ஒரு பதிலை சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம் விஷ்ணுவர்த்தன்.
ஏன் இந்த தடுமாற்றம்?
இது வழக்கமானதுதான். அஜீத் எப்படியும் சம்மர் டூர் போய்விடுவார். கிடைக்கிற ஒரு மாத கேப்பில் இன்னும் கூட திரைக்கதையை கூர்மை படுத்தலாம் என்று மெத்தனமாக இருந்துவிட்டாராம் விஷ்ணு. ஆனால் அஜீத் இவ்வளவு ஃபாஸ்ட்டாக இருப்பார் என்று அவரே நினைக்கவில்லையாம். தடுமாறிப் போயிருக்கிறார் இப்போது.
இருந்தாலும் மே 31 ந் தேதி படப்பிடிப்புக்கு கிளம்புவதாக இப்போதைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார் விஷ்ணு.
அதிருக்கட்டும்… ஆடுகளம் படத்திற்கு பிறகு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி ஹிட் கொடுக்காத டாப்ஸி இதில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இவரை முந்திக் கொண்டு முதலில் ஒப்பந்தமான முக்கிய ஜோடி நயன்தாரா.
இரண்டு அழகிகள் ஓரிடத்தில் இருந்தால் அங்கு ஃபயர் என்ஜின் அவசியம். முதல்ல அதுக்கு சொல்லி வைங்கப்பா…
English summary:
Every film finished ajith will going on tour, now finished billa-2 film but he is not go to tour.
Ajith will ready for vishnuvarthan nex film,so director very upset,because he is not ready for screen play.
Filed Under: சினிமா கிசு கிசு











