உதயநிதி நடனத்தைப் பார்த்து சிரித்த ஆர்யா !
ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளைதானே? உதயநிதி ஸ்டாலினின் பின்புலத்தையும், சீன பெருஞ்சுவருக்கு நிகரான அவரது பேக்ரவுண்டையும் தனியாக சொல்ல தேவையே இல்லை. அவ்வளவு பெரிய அந்தஸ்திலிருக்கும் உதயநிதி, திடீர் ஹீரோவாகி பாஸ் மார்க்கும் வாங்கியிருக்கிறார் மக்கள் மத்தியில்.
இந்த நிலையில்தான் தனது பாடல் காட்சிகள் சிலவற்றை அம்மா துர்காவுக்கும், அப்பா ஸ்டாலினுக்கும் திரையிட்டு காட்டினாராம் உதயநிதி. எந்த அம்மாதான் தன் பிள்ளையை விட்டுக் கொடுப்பார்கள்? சந்தோஷம் தாங்க முடியவில்லையாம் உதயநிதியின் அம்மாவுக்கு.
நடிக்கணும் என்று முடிவெடுத்தவுடன் உதயநிதி செய்த முதல் வேலை நடிப்பு பயிற்சி வகுப்புக்கும், சண்டை பயற்சி வகுப்புக்கும் சென்றதுதான். ‘ஸார்… நம்ம படத்துல ஃபைட்டே இல்ல. எதுக்கு அங்கெல்லாம் போய் கஷ்டப்படுறீங்க?’ என்று டைரக்டர் ராஜேஷ் சொன்னதும்தான் ஆர்வ ஆக்சிலேட்டரை கொஞ்சம் குறைத்தாராம் உதயநிதி.
டான்ஸ் கிளாசுக்கெல்லாம் போயிருந்தாலும், இவரை பெண்டு எடுத்துக் கொண்டிருப்பது பாடல் காட்சிகள்தான். உதயநிதியின் ஸ்பெஷல் மூவ்மென்ட்டை பார்த்து கதற கதற சிரித்தபடி கலாய்த்து கொண்டிருக்கிறாராம் ஆர்யா.
English summary:
Udayanidhi film ok ok dance movement arya but arya was lofing
Filed Under: சினிமா கிசு கிசு











