7am arivu trailer
சூர்யாவின் அசத்தலான நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவான ‘7ஆம் அறிவு’ படத்தின் டிரெய்லர் நேற்று சென்னை ந்நஃதம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் வைத்து வெளியிடப்பட்டது.
டிரெய்லரின் முதல் காட்சியிலேயே புத்த பிக்குவாக வரும் போதி வர்மா (சூர்யா) அனாசயமாக சண்டை போடுகிறார். ஸ்ருதி ஹாஸன் டி.என்.ஏ. பற்றி விளக்குகிறார். வியட்நாமிய வில்லன் ஜானி டிரை குயன் நமக்கு கிலி தருகிறார். மொத்தத்தில். இந்த டிரெய்லரே நம்மை மிரள வைக்கிறது
இப்படத்தின் டிரெய்லர் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தியேட்டர்களில் திரையிடப்படும். சனிக்கிழமை மாலை சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் பாடல்களின் டீஸர் விளம்பரம் வெளியாகும் என்று இப்படத்தின் இசையமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Filed Under: latest-tamil-movies-trailer











