பரத் நடிக்கும் ‘திருத்தணி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு:-…
admin | Sep 06, 2011 | 0 comments
‘யுவன் யுவதி’ படத்தை அடுத்து பரத் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திருத்தணி’. பேரரசு இயக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பரத்திற்கு ஜோடியாக இப்படத்தில் சுனைனா நடிக்கிறார். வேகமாக தயாராகி வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.
கஞ்சா கருப்பு, ஆஷிஷ் வித்யார்த்தி, எம். எஸ். பாஸ்கர், சிட்டி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு இயக்கம் மட்டுமின்றி, பாடல்கள் இசையமைப்பு எல்லாமே பேரரசுதான். “அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் ‘திருத்தணி’ வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது’’ என்று பேரரசு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
Filed Under: தமிழ் சினிமா











