த்ரிஷா vs க்ரிப்டாஸ்வில்லி : ஒரு டேஸ்ட்டி மேட்டர்

சென்னையில் செட்டிலாகிவிட்ட நியூசிலாந்துக்காரரான வில்லி என்பவர்தான் த்ரிஷாவின் லேட்டஸ்ட் பேவரிட். வில்லி என்பதைவிட கில்லி என்று சொல்லலாம்.
எந்த விஷயத்தில் என்பதை தொடரும் செய்தியில் பார்க்கலாம்!
ரெஸ்டாரண்டுகளின் கிங்காக இருக்கும் விபின்சச்சதேவின் உணவகங்களில் க்ரிப்டாஸ் பைவில்லி என்ற உணவகமும் ஒன்று. சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் ஹோட்டலுக்கு எதிரே உள்ள காதர்நவாஸ் சாலையில் இயங்கிவரும் இந்த ரெஸ்டாரண்டில் கிரேக்க உணவு வகைகள் கிடைப்பதுதான் ஸ்பெஷல்.
சிங்கப்பூர், லண்டன் என சர்வதேச நகரங்களில் கூட கிடைக்காத ஒரிஜினல் கிரேக்க சுவையை ‘கிரிப்டாஸ் பை வில்லி’ தருகிறது. இந்த உணவகத்தின் சிறப்பு அதன் செஃப் வில்லி. எனவேதான் ஹோட்டலின் பெயரோடு அவரது பெயரும் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு செஃபின் பெயரில் இயங்கும் ஒரே உணவகம் கிரிப்டாஸ்தான்.
“வில்லி நியூஸிலாந்துக்காரர். ஆனால் இந்தியாவே என் தாய்நாடு என்று செட்டிலாகிவிட்டார். இவர் ரோம், ஏதென்ஸ் என கிரேக்க – ரோமானிய நகரங்களுக்குப் போய் தங்கியிருந்து அந்நாட்டு உணவுகள் தயாரிக்கும் கலையை கற்று வந்தார். அதன் பிறகே இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். வில்லி இந்த உணவகத்தின் பணியாளர் அல்ல. பார்ட்னர் மாதிரி. இதன் நிரந்தர பலம் அவர் என்பதை உணர்த்தவே அவர் பெயரில் உணவகம் திறந்தேன்,” என்கிறார் இதனை நடத்தும் விபின் சச்தேவும் அவர் மனைவி சோமாவும்.
ஏதென்ஸில் கிடைக்கும் மோஸுகா, ரோல்டு கைரோஸ், சோலாகி என அத்தனையும் இங்கே ஒரிஜினல் சுவையுடன் கிடைக்கும், என்கிறார் ஓட்டலின் பொறுப்பாளரான சோமா. இங்கு தயாராகும் அனைத்து உணவு வகைகளுமே ஆலிவ் ஆயிலால் தயாரிக்கப்படுபவை என்பது கூடுதல் சிறப்பு. விதவிதமான சாலட்டுகள் ஃபிரஷ்ஷாக இங்கு கிடைக்கின்றன. பிளேட் ஒன்றுக்கு ரூ 280 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள சாலட்டுக்களை நனது விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்.
நடிகை த்ரிஷா இந்த உணவகத்திற்கு அடிக்கடி வருகை தந்து செஃப் வில்லியின் கை பக்குவத்தை விரும்பி சுவைக்கிறாராம். தவிர பிற சினிமா நட்சத்திரங்களும் க்ரிப்டாஸின் சுவைக்கு அடிமை. சென்னையில் கிரிகெட் போட்டி நடக்கும் சமயங்களில் தாஜ் ஹோட்டலில் தங்கியிருக்கும் க்ரிகெட் வீர்ர்கள், க்ரிப்டாசுக்கும் விசிட் அடிப்பது உண்டாம்.
இப்போ வில்லி எந்த விஷயத்தில் கில்லி என்பது உங்களுக்கு க்ளீயர்தானே?
Filed Under: நடிகைகள்










