குங்பூ சண்டையிடும் சூர்யா:– லேட்டஸ்ட் ஸ்டில்! !
admin | Sep 06, 2011 | 0 comments
சூர்யா இரு வேடங்களில் நடித்து வரும் ‘7ஆம் அறிவு’ படத்தில் பிரமாண்டமான குங்பூ சண்டைக்காட்சி இடம்பெறுகிறது. இதற்காகவே குங்பூ தெரிந்த வில்லன் வேண்டுமென்பதற்காக, வியட்நாமிலிருந்து ஜானி ட்ரி நுயன் (Johnny Tri Nguyen) என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ்.
கராத்தே, குங்பூ உள்ளிட்ட பலவிதமான தற்காப்புக் கலைகளை கற்றிருக்கிறார் ஜானி. ‘கிராடில் 2 தி கிரேவ்’ (Cradle 2 the Grave) என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். ஸ்பைடர் மேன் – 2 படத்தில் ஸ்பைடர்மேனுக்கு டூப் போட்டு நடித்தவர் என பல சிறப்புகளை உடையவர் ஜானி.
இவர்களிருவரும் இணைந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின். அதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்…
Filed Under: தமிழ் சினிமா











