கருங்காலி திரைவிமர்சனம்


பூமணி,பூந்தோட்டம் போன்ற மென்மையான படங்கள் எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் களஞ்சியம்…
இவர் இயக்கிய பூந்தோட்டம் எனக்கு ரொம்பவும் பிடித்த படம்… மிக மென்மையாக நகரும் திரைக்கதையும் முரளி பாத்திரமும் ரசிக்க வைப்பதாக இருக்கும்…தேவயானிக்கு முரளிக்கும் காதல் பூக்கும் அந்த கணம் மிக நன்றாக இருக்கும்.. கடலில் பேசிக்கொண்டு இருக்கும் போது மழை வந்து விட இருவரும் ஒரே குடையில் நடக்கும் அந்த காட்சி என் நெஞ்சில் நிலைத்தக்காட்சி…

இப்பவும் இரவு நேரங்களில் பூமணியில் வரும் எம்பாட்டு எம்பாட்டு பாடலை கேட்டுக்கொண்டு இருந்தால் தூங்கம் நம்மை அறியாமல் நம் கண்களை தழுவும்… அப்படி பட்ட மென்மையான கதைகளை தன் படத்தில் சொன்ன இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கி கதையின் நாயகனாக நடித்து வெகு நீண்டகாலம் தயாரிப்பில் இருந்த படம்தான் கருங்காலி…
பொட்டலம் ரவி (களஞ்சியம்) இரக்கமற்ற ஒரு ரவடி.. அனாதையான அவன், சென்னையின் குடிசைபகுதியில் சின்னவயதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் போது, அங்கு இருக்கும் ஒரு கம்யூனிஸ்ட் பெரியவர் எல்லா அனாதை குழந்தைகளையும் அரவனைத்து வளர்க்கின்றார்..

நாம் உயிரோடு இருக்க இருப்பவனிடம் இருந்து எடுக்கலாம் என்ற கொள்கையை பசங்களிடம் போதிக்க… அவர்கள் அது போலவே செயல்படுகின்றார்கள்.. ஒரு கட்டத்தில் கிழவர் இறந்து விட, அனாதை பசங்கள் அத்தனை பேரும் பசியில் துடிக்க… வயிற்று பிழைப்புக்கு கஞ்சா பொட்டலம் விற்கும் வேலை செய்கின்றார்கள்..நல்ல காசு வருகின்றது… மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுகின்றார்கள்… இந்த அனாதை சிறுவர் கூட்டத்தில் செங்கி என்ற பெண் இருக்கின்றாள்.. சின்ன வயதில் இருந்தே ரவி மீது காதலாய் இருக்கின்றாள்…செங்கியோடு பொட்டலம் ரவி உடலுறவு வைத்துக்கொண்டாலும் அவளை திருமணம் செய்ய மறுக்கின்றான்..சாப்பாட்டுக்கு கஷ்ட்டபட்டார்கள்… காசு கிடைத்தது.. ஆனால் சுபிட்ச வாழ்வை போட்டலம்ரவியால் வாழமுடியவில்லை காரணம் என்ன என்பதை திரையில் பாருங்கள்..

=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

பூமணி,பூந்தோட்டம் போன்ற மென்மையாக படம் எடுத்த இயக்குனர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கதாநாயகனாக மாற்றிக்கொண்ட படம்..

குப்பத்தில் போடும் முதல் குத்து பாடல் நன்றாகவே இருக்கின்றது.. ராபர்ட் மாஸ்டர் குருப் நன்றாகவே உழைத்து இருக்கின்றார்கள்..

செங்கேவி (அஸ்மிதா) கேரக்டரில் நடித்த பெண் ரொம்ப நன்றாக நடித்து இருக்கின்றார்கள்..


Filed Under: திரை விமர்சனம்

Tags: , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal